இந்தியா

'I Will Miss You'.. 8ம் வகுப்பு மாணவிக்கு Love Letter எழுதிய ஆசிரியர்: இணையத்தில் வைரலாகும் கடிதம்!

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தனது பள்ளி மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'I Will Miss You'.. 8ம் வகுப்பு மாணவிக்கு  Love Letter எழுதிய ஆசிரியர்: இணையத்தில் வைரலாகும் கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாம் எத்தனையோ காதல் கடிதங்களை படித்தும், பார்த்தும், கேட்டும் இருப்போம். ஆனால் தற்போது 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் எழுதிய காதல் கடிதம் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட சதார் கொத்வாலி கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஹரி ஓம்சிங் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

'I Will Miss You'.. 8ம் வகுப்பு மாணவிக்கு  Love Letter எழுதிய ஆசிரியர்: இணையத்தில் வைரலாகும் கடிதம்!

இவர்தான் தனது பள்ளியில் படிக்கும் 8 ம் வகுப்பு மாணவிக்குக் காதல் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், "பள்ளிக்குக் குளிர்கால விடுமுறை விடப்பட்டுள்ளதால் உன்னை நான் மிஸ் செய்கிறேன். உன்னை எனக்கு மிகவும் பிடித்துள்ளது திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.

உனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தாள் என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசவும். உண்மையாகவே காதலித்தால் கண்டிப்பாக நேரில் வரவேண்டும். நான் உன்னை எப்போதும் காதலிப்பேன் என எழுதியுள்ளார். மேலும் கடிதத்தின் கடைசியில், இந்த கடிதத்தைப் படித்தவுடன் கிழித்துவிடவும் எனவும் ஆசிரியர் எழுதியுள்ளார்.

'I Will Miss You'.. 8ம் வகுப்பு மாணவிக்கு  Love Letter எழுதிய ஆசிரியர்: இணையத்தில் வைரலாகும் கடிதம்!

இந்த கடிதத்தால் அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் ஆசிரியரைத் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அதற்கு ஆசிரியர் உங்கள் மகளைக் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து போலிஸார் அவரை அழைத்து மன்னிப்பு கேட்கும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர் 'மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது. என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது' என போலிஸாரையே மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அம்மாநில கல்வித்துறை விசாரணை நடத்தி வருகிறது.

banner

Related Stories

Related Stories