இந்தியா

காதலரை நம்பி சென்ற சிறுமி.. 12 மணி நேரம் 8 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை.. மகாராஷ்டிராவில் பரபரப்பு !

சிறுமியை காதலர் உள்ளிட்ட 8 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலரை நம்பி சென்ற சிறுமி.. 12 மணி நேரம் 8 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை.. மகாராஷ்டிராவில் பரபரப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் பாலியல் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகிறது. தினமும் செய்திகளில் அதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றது.

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் 15 வயது சிறுமி ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் மாவட்டத்தாய் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

காதலரை நம்பி சென்ற சிறுமி.. 12 மணி நேரம் 8 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை.. மகாராஷ்டிராவில் பரபரப்பு !

சம்பவத்தன்று இரவு அந்த சிறுமியை அவரது காதலர் கடற்கரை அருகே இருக்கும் ஒரு இடத்துக்கு வருமாறு அழைத்துள்ளார். காதலரை நம்பிய அந்த சிறுமியும் அங்கு சென்று காதலரை சந்தித்துள்ளார். அப்போது சிறுமியை தனியே அழைத்துச்சென்ற அவர், அங்குவைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அது தவிர, அங்கு தனது நண்பர்கள் 7 பேரை அழைத்து அவர்களையும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யவைத்துள்ளார். மொத்தம் 12 மணி நேரம் இந்த கொடூர கும்பல் சிறுமையை வன்கொடுமை செய்துள்ளது. பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

காதலரை நம்பி சென்ற சிறுமி.. 12 மணி நேரம் 8 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை.. மகாராஷ்டிராவில் பரபரப்பு !

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் அந்த கொடூரர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் மஹாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories