இந்தியா

16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. மகனின் கொடூர செயலுக்கு உறுதுணையாக இருந்த தாய்..கொல்கத்தாவில் பயங்கரம்!

16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றச்செயலுக்கு குற்றவாளியின் தாயாரும் உறுதுணையாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. மகனின் கொடூர செயலுக்கு உறுதுணையாக இருந்த தாய்..கொல்கத்தாவில் பயங்கரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஹரிதேவ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் குணால் கோத்தாரி. இவரது தாயார் பெயர் அனுஸ்ரீ. இவர் அந்த பகுதியில் ஒரு பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது பார்லரில் 16 வயது சிறுமி ஒருவர் அழகு கலை பயிற்சி பெற்றுவந்துள்ளார்.

அந்த சிறுமி மீது குணாலுக்கு ஒரு கண் இருந்துள்ளது. இது குறித்து அவர் தனது தாய் அனுஸ்ரீயிடமும் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிந்ததும் மகனின் தவறான எண்ணத்தை கண்டிக்காமல் தாயும் அதற்கு உடந்தையாக இருக்க சம்மதித்துள்ளார்.

16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. மகனின் கொடூர செயலுக்கு உறுதுணையாக இருந்த தாய்..கொல்கத்தாவில் பயங்கரம்!

அதன்படி கடந்த அக்டோபர் மாதம் துர்கா பூஜை பண்டிகையின் போது அந்த சிறுமியை தனது வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அனுஸ்ரீ அழைத்துள்ளார். அதன்படி வீட்டுக்குவந்த அந்த சிறுமியிடம் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தாய் குடிக்க கொடுத்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த அனுஸ்ரீயின் மகன் குணால் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர் சிறுமிக்கு சுயநினைவு வந்தபோது தனக்கு நடந்த இந்த கொடுமை அவருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் பயம் காரணமாக அந்த சிறுமி இதுகுறித்து யாரிடமும் கூறாத நிலையில், தற்போது தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.

16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. மகனின் கொடூர செயலுக்கு உறுதுணையாக இருந்த தாய்..கொல்கத்தாவில் பயங்கரம்!

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலிஸார் அனுஸ்ரீ மற்றும் அவரது மகன் குணாலை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories