இந்தியா

“புதுச்சேரியில் தற்போது பொம்மை ஆட்சி நடக்கிறது.. மதவாத ஆட்சி உருவாகி விடக்கூடாது” : முதல்வர் பேச்சு!

“புதுச்சேரி முதலமைச்சர் ஒரு பொம்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“புதுச்சேரியில் தற்போது பொம்மை ஆட்சி நடக்கிறது.. மதவாத ஆட்சி உருவாகி விடக்கூடாது” : முதல்வர் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரியில் கழக அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார் இல்லத் திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. திருமணவிழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு பெரிய மாற்றம்.

அங்கே உதயசூரியன் ஆட்சி மலர்ந்தது. மலந்திருக்கின்ற இந்த ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று பெருமையோடு செல்கிறோம். அப்படிப்பட்ட திராவிடம் மாடல் ஆட்சி புதுவைக்கு வருவது தேவைதான். அதைத்தான் எல்லாம் சொன்னார்கள். அந்த எண்ணம் உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் இருக்கிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அந்த வாய்ப்பு கிட்டிருக்கும். ஆனால் போய்விட்டது. அதுபற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இப்போ இதே புதுவை மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்துக் கொண்டிருக்கிறது. அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தான். இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் அது மக்களுக்காக நடைபெறுகிறதா?

“புதுச்சேரியில் தற்போது பொம்மை ஆட்சி நடக்கிறது.. மதவாத ஆட்சி உருவாகி விடக்கூடாது” : முதல்வர் பேச்சு!

ஒரு முதலமைச்சர் என்று ஒருவர் இருக்கிறார். அவர் உயர்ந்த மனிதன் தான் உயரத்தில், ஆனால் அடிபணிந்து கிடக்கிறார். பொம்மையாக ஒரு முதலமைச்சர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரை பற்றி குறை சொல்ல விரும்பவில்லை அவர் நல்லவர் தான். ஆனால் நல்லவர் வல்லவராக இருக்க வேண்டுமா இல்லையா? அவர் அப்படி இல்லையே.

ஒரு கவர்னர் ஆட்டிப்படைக்க கூடிய வகையில் புதுவையிலே ஒரு ஆட்சி நடக்கிறது என்று சொன்னால் வெட்கப்பட வேண்டாமா? அதைக் கண்டு வெகுண்டு எழுந்திருக்க வேண்டாமா? இப்படி இங்கே ஒரு ஆட்சி‌ நடைபெற்ற கொண்டிருக்கிறது என்பது இந்த புதுவை மாநிலத்திற்கு மிகப்பெரிய ஒரு இழுக்காக அமைந்திருக்கிறது.

“புதுச்சேரியில் தற்போது பொம்மை ஆட்சி நடக்கிறது.. மதவாத ஆட்சி உருவாகி விடக்கூடாது” : முதல்வர் பேச்சு!

எதாவது ஒரு நன்மை நடந்திருக்கிறதா? இல்லையே. அது அப்படிப்பட்ட நிலையில் புதுவை மாநிலத்தில் ஒரு ஆட்சியை நடந்து கொண்டிருக்கக் கூடிய நேரத்தில், தான் நம்முடைய தோழர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் எல்லாம் இங்கு ஒரு ஆட்சி வரவேண்டும். நம்முடைய ஆட்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தி காட்டுகின்றனர் என்பதில் தவறில்லை.

ஏற்கனவே நாம் ஆட்சியில் இருந்தவர்கள் தான். ஃபாரூக், ராமசந்திரன், ஜானகிராமன் தலைமையில் தி.மு.க ஆட்சி நடந்துள்ளது. நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் ஆட்சி மீண்டும் புதுவை மாநிலத்தில் உதயமாகும். அதில் எந்தவித சந்தேகப்பட வேண்டாம். இதே வைத்தியலிங்கம், நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி ஆட்சி நடந்தது.

“புதுச்சேரியில் தற்போது பொம்மை ஆட்சி நடக்கிறது.. மதவாத ஆட்சி உருவாகி விடக்கூடாது” : முதல்வர் பேச்சு!

புதுச்சேரியில் விரைவில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறீர்கள். தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல அதை தொடர்ந்து நடைபெற இருக்கக்கூடிய சட்டமன்ற தேர்தலே நாம் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஒரு இலக்கோடு போது பணியாற்ற வேண்டும். அதற்காக உங்களுடைய பணிகளை தொடங்குங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல் நேரத்திலே யார் கூட்டணி இந்த கூட்டணி அது எந்த வகையில் அமைய இருக்கிறது என்பது அப்போது முடிவெடுக்கப்படும். ஆனால் வெற்றிக் ஆச்சாரமாக நம்முடைய கடமையை நிறைவேற்றுவதற்கு முன் வர வேண்டும் என்பதை உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories