இந்தியா

வயிறுவலியால் துடிதுடித்த கணவர்.. மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை.. மனைவி அதிரடி கைது !

கணவரின் நண்பரோடு சேர்ந்து கணவரை Slow Poison கொடுத்து கொலைசெய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயிறுவலியால் துடிதுடித்த கணவர்.. மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை.. மனைவி அதிரடி கைது !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மும்பையைச் சேர்ந்தவர் கமல்காத். இவருக்கும் கவிதா என்ற பெண்ணுக்கும் சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர்.

பின்னர் இரு குடும்பத்தாரும் சமாதானம் பேசிய நிலையில், குழந்தைக்காக சேர்ந்து வாழ இருவரும் ஒப்புக்கொண்டு சேர்ந்து வாழ்ந்து வைத்துள்ளனர். அப்போது கமல்காத்துக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

வயிறுவலியால் துடிதுடித்த கணவர்.. மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை.. மனைவி அதிரடி கைது !

ஆனால்,அவரின் வலி குணமாகாத நிலையில், உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். அவருக்கு நடைபெற்ற பரிசோதனையில் அவரின் ரத்தத்தில் அளவுக்கதிகமாக ஆர்செனிக் மற்றும் தாலியம் இருப்பது கண்டறியப்பட்டது.

சாதாரண மனித உடலில் இதுபோன்று அதிகளவில் ஆர்செனிக் மற்றும் தாலியம் இருப்பது மருத்துவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலிஸாரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மரணமாக கருதப்பட்ட இந்த வழக்கு விசாரணை குற்றப்பிரிவுக்கு மாற்றி விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

வயிறுவலியால் துடிதுடித்த கணவர்.. மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை.. மனைவி அதிரடி கைது !

அதன்படி மனைவி கவிதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. கணவர் கமல்காத்தின் நண்பர் ஹிடேஷ் என்பவருடன் கவிதாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளதும், இருவரும் சேர்ந்து கமல்காத்தை கொலை செய்ய திட்டமிட்டு உணவில் மெதுவாக கொல்லும் விஷத்தை கொடுத்து கமல்காத்தை கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories