இந்தியா

வெளிநாட்டு மாணவிக்கு மது கொடுத்து பாலியல் கொடுமை.. பேராசிரியரின் செயலால் ஹைதராபாத்தில் அதிர்ச்சி !

மத்திய பல்கலைக்கழகத்தில் படிக்கும் வெளிநாட்டு மாணவிக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு மாணவிக்கு மது கொடுத்து பாலியல் கொடுமை.. பேராசிரியரின் செயலால்   ஹைதராபாத்தில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இன்று இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அது தவிர வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர்.

இந்த பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் நடந்த பாலியல் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பயிலும் தாய்லாந்து நாட்டை சேர்ந்த மனைவி ஒருவரை மாலை 4 மணி அளவில் படிப்புக்கு தேவைப்படும் புத்தகங்கள் தருவதாக பேராசிரியர் ஒருவர் அழைத்துள்ளார்.

வெளிநாட்டு மாணவிக்கு மது கொடுத்து பாலியல் கொடுமை.. பேராசிரியரின் செயலால்   ஹைதராபாத்தில் அதிர்ச்சி !

இதனை நம்பிய அந்த வெளிநாட்டு மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பேராசிரியரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது சிறிது நேரம் மாணவியுடன் பேசிக்கொண்டிருந்த பேராசிரியர் பின்னர் அந்த பெண்ணிடம் மது அருந்துமாறு கூறியுள்ளார்.

பின்னர் அந்த பெண் மது அருந்தியதும் பேராசிரியர் மாணவியிடம் தவறாக நடக்க முயன்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அங்கிருந்து உடனடியாக வெளியேறி சக மாணவர்களிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.

வெளிநாட்டு மாணவிக்கு மது கொடுத்து பாலியல் கொடுமை.. பேராசிரியரின் செயலால்   ஹைதராபாத்தில் அதிர்ச்சி !

இதனைத் தொடர்ந்து மாணவர் சங்கத்தினர் பல்கலைக்கழக வளாகத்தில் குவிந்து பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்ட நிலையில் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவிக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories