இந்தியா

போதையில் இளம் பெண்.. காதலி வீட்டிற்கு அழைத்து சென்று வன்கொடுமை செய்த Rabbito டிரைவர்: பெங்களூரில் பகீர்!

பெங்களூருவில் இளம் பெண்ணை ராப்பிடோ ஓட்டுநரும், அவரது நண்பரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதையில் இளம் பெண்.. காதலி வீட்டிற்கு அழைத்து சென்று வன்கொடுமை செய்த Rabbito டிரைவர்: பெங்களூரில் பகீர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெங்களூரு நகரில் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் கடந்த 25 ஆம் தேதி நள்ளிரவு இளம் பெண் ஒருவர் தனது தோழி வீட்டில் மது குடித்துள்ளார். ப்போது அவர் போதையிலிருந்ததால் இங்கே தங்கும்படி தோழி கூறியுள்ளார். ஆனால் அவர் தோழியின் பேச்சை கேட்காமல் ராப்பிடோவில் வீட்டிற்குச் செல்ல புக் செய்துள்ளார்.

போதையில் இளம் பெண்.. காதலி வீட்டிற்கு அழைத்து சென்று வன்கொடுமை செய்த Rabbito டிரைவர்: பெங்களூரில் பகீர்!

இதையடுத்து தான் புக் செய்த வாகனத்தில் ஏறி குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல வேண்டும் என ஓட்டநரிடம் கூறியுள்ளார். ஆனால் ராப்பிடோ ஓட்டுநர் இளம் பெண்ணின் நிலையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவர் சொன்ன இடத்திற்கு அழைத்துச் செல்லாமல் காதலியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு, காதலியின் உதவியுடன் ராப்பிடோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவர் சேர்ந்து கொண் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அடுத்தநாள்தான் அந்த பெண்ணுக்கு நடந்த அனைத்து சம்பவங்களும் தெரியவந்துள்ளது.

போதையில் இளம் பெண்.. காதலி வீட்டிற்கு அழைத்து சென்று வன்கொடுமை செய்த Rabbito டிரைவர்: பெங்களூரில் பகீர்!

இதையடுத்து, அந்த பெண் தனது நண்பர்கள் உதவியுடன் காவல் துறையிடம் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து இளம் பெண் சொன்ன அடையாளங்களைக் கொண்டு ராப்பிட்டோ ஓட்டுநரை போலிஸார் கைது செய்து விசாரணை செய்ததில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சகபுதீன், பெங்களூரு ஹுலிமாவு பகுதியைச் சேர்ந்த அஸ்ரப் இவர்களுக்கு உடந்தையாக இருந்த 22 வயது பெண் என்பது தெரியவந்ததுள்ளது.

மேலும், ராப்பிட்டோ ஓட்டுநர் மீது ஏற்கனவே பல குற்றவழக்குள் பதிவாகியுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதேபோன்று வேறு யாரிடமாவது நடந்து கொண்டுள்ளாளர்களா என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராப்பிட்டோ ஊழியரால் இளம் பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories