இந்தியா

காதலனுக்காக தாய் செய்த செயல்.. சிறுமிக்கு நேர்ந்த அவலம்.. மகாராஷ்டிராவில் கொடூரம் !

காதலன் ஆசைக்காக பெற்ற 15 வயது மகளை தாயே திருமண செய்து கொடுத்துள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலனுக்காக தாய் செய்த செயல்.. சிறுமிக்கு நேர்ந்த அவலம்.. மகாராஷ்டிராவில் கொடூரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

காதலன் ஆசைக்காக பெற்ற 15 வயது மகளை தாயே திருமண செய்து கொடுத்துள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் 36 வயதுடைய பெண். இவர் தனது கணவரை விட்டு பிரிந்து 15 வயது மகளுடன் தனியே வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு அவரது தூரத்து உறவினரான 28 வயதுடைய இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாற, இருவரும் இரகசியமாக சந்தித்து வந்துள்ளனர்.

காதலனுக்காக தாய் செய்த செயல்.. சிறுமிக்கு நேர்ந்த அவலம்.. மகாராஷ்டிராவில் கொடூரம் !

ஆனால் அந்த இளைஞரோ, பெண்ணிடம் தனக்கு உனது மகளை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார். அதன்பேரில், அந்த பெண்ணும் சிறுமியிடம் திருமணம் செய்துகொள்ளும்படி கட்டயப்படுத்தியுள்ளார். இதற்கு சிறுமி சம்மதிக்கவில்லை என்றதும், அவரை மிரட்டி அடித்து துன்புறுத்தியுள்ளார்.

காதலனுக்காக தாய் செய்த செயல்.. சிறுமிக்கு நேர்ந்த அவலம்.. மகாராஷ்டிராவில் கொடூரம் !

இதனால் வெறும் வழி தெரியாத சிறுமியும் திருமணதிற்கு சம்மதம் தெரிவித்து, ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் அந்த சிறுமியின் விருப்பமில்லாமல் கட்டயப்படுத்தி அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து சிறுமி தனது தோழி ஒருவரிடம் தெரிவிக்க, அது அப்படியே ஒரு சமூக ஆர்வலர் காதுக்கு சென்றுள்ளது.

காதலனுக்காக தாய் செய்த செயல்.. சிறுமிக்கு நேர்ந்த அவலம்.. மகாராஷ்டிராவில் கொடூரம் !

இதைத்தொடர்ந்து அவரளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியிடம் நடந்தவற்றை விசாரித்து, சிறுமியின் தாய் மற்றும் தாயின் காதலன் ஆகியோரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories