இந்தியா

கணவன் கண்முன்னே மனைவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. கொள்ளையடிக்க வந்த இடத்தில் செய்த கொடூரம் !

கொள்ளையடிக்க வந்த 4 பேர் கொண்ட கும்பல் கணவன் முன்னே மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் கண்முன்னே மனைவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. கொள்ளையடிக்க வந்த இடத்தில் செய்த கொடூரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கொள்ளையடிக்க வந்த 4 பேர் கொண்ட கும்பல் கணவன் முன்னே மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி என்றார் பகுதியைச் சேர்ந்தவர் ஜேதுசிங். 47 வயதுடைய இவர் அந்த பகுதியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 45 வயதில் மனைவி ஒருவர் உள்ளார்.

கணவன் கண்முன்னே மனைவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. கொள்ளையடிக்க வந்த இடத்தில் செய்த கொடூரம் !

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு நேரம், ஜேது சிங் மற்றும் அவரது மனைவி சாப்பிட்டு விட்டு உறங்க சென்றுள்ளனர். அப்போது யாரோ கதவை தட்டுவது போல் சத்தம் கேட்டுள்ளது. அந்த சமயத்தில் யாரென்று பார்ப்பதற்காக ஜேதுசிங் கதவை திறந்துள்ளார். அப்போது வெளியே நின்று கொண்டிருந்த 4 பேர் கொண்ட கும்பல் உடனே அவரை தாக்கி பணம் பறிக்க முயன்றுள்ளனர்.

மேலும் வீட்டினுள் சென்று அவரை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த ரூ.1,400 பறித்துள்ளனர். அதோடு வீட்டில் வேறேதும் பொருள் இருக்கிறதா என்று கேட்கையில் எதுவும் இல்லை என்று கத்தி கூச்சலிட்டுள்ளார். மேலும் வீட்டில் தேடி தேடி பார்த்து அங்கே இருந்த வெள்ளி பொருட்களை திருடியுள்ளனர். மீதமுள்ள பொருட்கள், பணம் எங்கே என்று கேட்டு ஜேதுசிங்கை கட்டிப்போட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.

கணவன் கண்முன்னே மனைவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. கொள்ளையடிக்க வந்த இடத்தில் செய்த கொடூரம் !

இதைக்கண்டதும் ஜேதுசிங்கின் மனைவி கத்தியுள்ளார். இதையடுத்து இந்த கொள்ளை சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது என்று கூறி, ஜேதுசிங்கின் மனைவியின் கை, கால்களை கட்டி கணவன் கண்முன்னே மனைவியை அனைவரும் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அனைவரும் தப்பியோடியுள்ளனர்.

கணவன் கண்முன்னே மனைவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. கொள்ளையடிக்க வந்த இடத்தில் செய்த கொடூரம் !

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஜேதுசிங் மற்றும் பாதிக்கப்பட்ட அவரது மனைவி அருகிலிருந்த காவல்நிலையத்திற்கு சென்று புகாரளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், தீவிர விசாரணை மேற்கொண்டு, அப்பகுதி சிசிடிவியை ஆய்வு செய்து குற்றம்சாட்டப்பட்ட கும்பலை தேடி வந்தனர்.

தற்போது அதில் 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை மட்டும் தீவிரமாக தேடி வருகின்றனர். கொள்ளையடிக்க வந்த 4 பேர் கொண்ட கும்பல் கணவன் முன்னே மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories