இந்தியா

கர்நாடகா : மகள் தற்கொலை செய்ததால் ஆத்திரம்.. விஷம் கொடுத்து காதலனை கொன்ற சிறுமியின் தந்தை !

காதலிப்பதை கண்டித்ததால் பெற்றோர் மீது கோபமடைந்த சிறுமி தற்கொலை செய்துகொண்ட பின், சிறுமியின் காதலனை விஷம் வைத்து கொலை செய்த சிறுமியின் தந்தையின் செயல் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா : மகள் தற்கொலை செய்ததால் ஆத்திரம்.. விஷம் கொடுத்து காதலனை கொன்ற சிறுமியின் தந்தை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடக மாநிலம் விஜயாப்புர பகுதியை அடுத்துள்ள கோசனகி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுன பீமன்னா ஜமகண்டி. 21 வயதாகும் இவரும், கல்கவடா என்ற பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த குரப்பா என்பரின் மகளும் காதலித்து வந்துள்ளனர். குரப்பாவின் மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இவர்கள் காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வர, அதற்கு சிறுமியின் பெற்றோர் கண்டித்துள்ளனர். மேலும் காதலனுடன் இனி பேச கூடாது, பழக கூடாது என்று சிறுமியை கண்டித்துள்ளனர். அதையும் மீறி பேசி, பழகுவதை பார்த்தல் இருவரையும் கொன்று விடுவதாக மிரட்டியும் உள்ளனர்.

கர்நாடகா : மகள் தற்கொலை செய்ததால் ஆத்திரம்.. விஷம் கொடுத்து காதலனை கொன்ற சிறுமியின் தந்தை !

இதனால் சிறுமியும் பயந்து போயுள்ளார். ஆனால் தனது காதலனை காணாமல், பேசாமல் இருக்க முடியாத சிறுமி, அவரை ரகசியமாக சந்தித்து வந்துள்ளார். இப்படி இவர்களது ரகசிய சந்திப்பை கண்ட, சிறுமியின் தந்தை சிறுமியை அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டிலிருந்த விஷத்தை அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இதனை கண்ட பெற்றோர் கதறி அழுதனர். மேலும் தனது மகள் உயிரிழப்புக்கு காரணம் மகளின் காதலன் தான் என்று, சிறுமியின் தந்தை கோபம் கொண்டார்.

கர்நாடகா : மகள் தற்கொலை செய்ததால் ஆத்திரம்.. விஷம் கொடுத்து காதலனை கொன்ற சிறுமியின் தந்தை !

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை குரப்பா, தனது மகளின் காதலனை அடித்து இழுத்துவந்து கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் தனது மகள் உன்னால் தான், உனக்காக தான் விஷம் குடித்து இறந்தாள்; எனவே நீயும் அப்படியே உயிரை விடு என்று கூறி அவரது கட்டாயப்படுத்தி விஷத்தை ஊற்றியுள்ளார்.

பின்னர் இந்த கொலையை மறைப்பதற்காக அங்கிருக்கும் கிருஷ்ணா நதியில், காதலன் உடலை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி போட்டுள்ளார். இதையடுத்து எதோ பொருள் மிதந்து வருவதை கண்ட பொதுமக்கள், இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் அறிந்து வந்த அவர்கள், சாக்குமூட்டையை பிரித்து பார்த்ததில் இருவரின் உடலும் அதில் இருந்துள்ளது. பின்னர் அந்த உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.

கர்நாடகா : மகள் தற்கொலை செய்ததால் ஆத்திரம்.. விஷம் கொடுத்து காதலனை கொன்ற சிறுமியின் தந்தை !

இதனிடையே தனது மகளை காணொம் என்று காவல்துறையில் பெற்றோர் புகாரளித்துள்ளனர். இதையடுத்து கைப்பற்றப்பட்ட உடலை வைத்து விசாரணை மேற்கொண்டபோது, அது காணாமல் போன மல்லிகார்ஜுன என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். பின்னர் பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மகனின் காதல் விவகாரத்தை கூறியுள்ளனர்.

இதையடுத்து அந்த சிறுமியின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களது பதிலில் சந்தேகம் ஏற்படவே அவர்களிடம் கிடுகுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். பிறகு தாங்கள் ஆணவ கொலை செய்ததை சிறுமியின் தந்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கில் சிறுமியின் மாமாவையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories