இந்தியா

தெருநாய்கள் தொல்லை.. 18 நாய்களை இரக்கமின்றி விஷம் வைத்து கொன்ற கொடூரன்.. ஆந்திராவில் அதிர்ச்சி !

தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக, அங்கே சுற்றித்திரிந்த சுமார் 18 தெரு நாய்களை விஷம் வைத்து கொன்றுள்ள கொடூர நபரின் செயல் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெருநாய்கள் தொல்லை.. 18 நாய்களை இரக்கமின்றி விஷம் வைத்து கொன்ற கொடூரன்.. ஆந்திராவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாய்கள் என்பது மனிதர்களுக்கு பிடித்த விலங்காகும். 'நாய் என்றால் நன்றி' என்ற வாசகமும் உண்டு. அதற்கு அர்த்தம், நாம் வீட்டில் வளர்க்கும் நாய், முதலாளிக்கு ஆபத்து என்றால் அது தான் முதலில் வரும். மேலும் காவல்காக்கும் சிறந்த காவலனாக நாயை தான் கருதுவர்.

ஆனால் தெரு நாய்களை மட்டும் எப்போதும் நம்ப முடியாது என்று பலரது கருத்துக்களும் இருக்கிறது. அந்த வகையில் கேரள மாநிலத்தில் கடந்த மாதம் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து காணப்பட்டது. மேலும் அந்த தெரு நாய்கள் சாலையோரம் செல்லும் பொதுமக்களை கடித்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். பலபேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

தெருநாய்கள் தொல்லை.. 18 நாய்களை இரக்கமின்றி விஷம் வைத்து கொன்ற கொடூரன்.. ஆந்திராவில் அதிர்ச்சி !

அதோடு அங்கு பள்ளி செல்லும் மாணவிகளை, நபர் ஒருவர் துப்பாக்கியோடு கூட்டி செல்லும் வீடியோவும் வெளியாகி வைரலானது. எனவே தெரு நாய்களை பிடித்து கொடுப்போருக்கு சன்மானம் வழங்கப்போவதாக அம்மாநிலம் அறிவித்திருந்தது. இதையடுத்து தெரு நாய்கள் தொல்லை குறித்த செய்தி எதுவும் பெரிதாக வெளியாகவில்லை.

இந்த நிலையில் தற்போது ஆந்திர மாநிலம் எலுரு என்ற பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று, 18 தெரு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டன. இது தொடர்பான செய்தி வெளியானதையடுத்து, அந்த கொடூரகாரர் மீது நடவடிக்கை எடுக்குமாறு விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தெருநாய்கள் தொல்லை.. 18 நாய்களை இரக்கமின்றி விஷம் வைத்து கொன்ற கொடூரன்.. ஆந்திராவில் அதிர்ச்சி !

இதையடுத்து இது குறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், அந்த நாய்களை எல்லாம் விஷம் வைத்து கொன்றது செப்ரோல் கிராமத்தைச் சேர்ந்த வீரபாபு என்பதை கண்டறிந்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, அந்த கிராமத்தின் தலைவர் மற்றும் செயலர் ஆகியோர்தான் நாய்களை விஷ ஊசி போட்டு கொலை செய்ய சொன்னதாக வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து வீரபாபு மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் கூறியவற்றின் உண்மை தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திரா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெருநாய்கள் தொல்லை.. 18 நாய்களை இரக்கமின்றி விஷம் வைத்து கொன்ற கொடூரன்.. ஆந்திராவில் அதிர்ச்சி !

முன்னதாக தெலுங்கானா மாநிலத்திலும் இதே போன்று 100-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு விஷ ஊசி செலுத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது ஆந்திராவில் இப்படி ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories