இந்தியா

கோபித்துக்கொண்டு வெளியே சென்ற மனைவி.. இரவு நேரத்தில் கணவர் கண்முன்னே மனைவிக்கு நேர்ந்த கொடுமை !

தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கணவர் கண் முன்னே மனைவி கூட்டுப்பாலியால் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோபித்துக்கொண்டு வெளியே சென்ற மனைவி.. இரவு நேரத்தில் கணவர் கண்முன்னே மனைவிக்கு நேர்ந்த கொடுமை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஜார்கண்ட் மாநிலம் பலாமு பகுதியில் உள்ள சத்பாவ்ரா என்ற கிராமத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். அண்மையில் திருமணமான இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே சிறு சிறு சண்டை வந்துள்ளது.

சம்பவத்தன்றும் அதே போல் சண்டை ஏற்பட்டுள்ளதால் மனைவி கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டிற்கு செல்ல முற்பட்டுள்ளார். மனைவியை காணவில்லை என்று பதறியடித்த கணவர், அவரது உறவினர் ஒருவரை கூட்டிக்கொண்டு இரவு முழுவதும் தேடி அழைத்துள்ளார்.

கோபித்துக்கொண்டு வெளியே சென்ற மனைவி.. இரவு நேரத்தில் கணவர் கண்முன்னே மனைவிக்கு நேர்ந்த கொடுமை !

அப்போது அங்கிருந்த தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் மனைவி நடந்து சென்று கொண்டிருந்ததை பார்த்ததையடுத்து அவர் தனது மனைவியை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார். அப்போது அங்கே மற்ற பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கணவர் மற்றும் அவரது உறவினரை தாக்கி மனைவியை அருகேயுள்ள ஒரு இடத்திற்கு இழுத்துச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும் அந்த பெண்ணை அந்த இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு அதே வாகனத்தில் கடத்தவும் முயன்றுள்ளனர். அப்போது அவர்கள் பைக்கின் மீது வேறொரு நான்கு சக்கர வாகனம் ஒன்று மோதியதால், அந்த பெண் தன்னை காப்பாற்றும்படி கெஞ்சியுள்ளார்.

கோபித்துக்கொண்டு வெளியே சென்ற மனைவி.. இரவு நேரத்தில் கணவர் கண்முன்னே மனைவிக்கு நேர்ந்த கொடுமை !

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களை அழைத்து பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு, குற்றவாளிகளில் இரண்டு பேரை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். மேலும் இவர்கள் அடித்ததில் காயமடைந்த பெண்ணின் கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குற்றவாளிகளில் 2 பேர் தனக்கு தெரிந்தவர் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதோடு தப்பியோடிய மற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories