இந்தியா

கருப்பாக இருப்பதாக கிண்டல்.. கோபத்தில் மனைவி செய்த செயலால் கணவருக்கு நேர்ந்த துயரம்:சத்தீஸ்கரில் பயங்கரம்

கருப்பதாக இருப்பதாக கூறி கிண்டல் செய்ததால் கணவனின் ஆணுறுப்பை கோடாரி கொண்டு வெட்டிய மனைவியின் செயல் சத்தீஸ்கரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பாக இருப்பதாக கிண்டல்.. கோபத்தில் மனைவி செய்த செயலால் கணவருக்கு நேர்ந்த துயரம்:சத்தீஸ்கரில் பயங்கரம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் பகுதியிலுள்ள அம்ளிஸ்வர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் சோன்வான் (வயது 40). இவர் தனது மனைவி சங்கீதாவுடன் (வயது 30) வாழ்ந்து வந்துள்ளார். திருமணம் ஆனதில் இருந்தே இருவருக்குள்ளும் தகராறு ஏற்படும்போதெல்லாம் மனைவியின் கறுமை நிறத்தை வைத்து வசைபாடி வந்துள்ளார் ஆனந்த்.

இப்படியாக ஒவ்வொரு முறையும் இருவருக்குள்ளும் சண்டை ஏற்படும்போதெல்லாம் கணவன், மனைவியின் நிறத்தை கிண்டல் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே போல் இருவருக்குள்ளும் ஏதோ சிறு வாக்குவாதம் ஏற்பட மீண்டும் தனது மனைவியின் நிறத்தை வைத்தே கிண்டல் செய்துள்ளார் ஆனந்த்.

கருப்பாக இருப்பதாக கிண்டல்.. கோபத்தில் மனைவி செய்த செயலால் கணவருக்கு நேர்ந்த துயரம்:சத்தீஸ்கரில் பயங்கரம்

இதனால் பொறுமை இழந்த மனைவி சங்கீதா அவரை திட்டியுள்ளார்; மேலும் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து தனது கணவர் ஆனந்தை வெட்டியுள்ளார். இருப்பினும் கோபம் தீராத சங்கீதா, மற்றொரு கூர்மையான ஆயுதத்தை எடுத்து வந்து கணவரின் ஆணுறுப்பை வெட்டியுள்ளார்.

இதையடுத்து சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், நடந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் ஆனந்தின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

கருப்பாக இருப்பதாக கிண்டல்.. கோபத்தில் மனைவி செய்த செயலால் கணவருக்கு நேர்ந்த துயரம்:சத்தீஸ்கரில் பயங்கரம்

மேலும் சங்கீதாவையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிறத்தை வைத்து கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த மனைவி, கணவரின் அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories