இந்தியா

நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட காதலர்.. காதலருக்கு பாடம் புகட்ட நினைத்த காதலி.. இறுதியில் நடந்த சோகம் !

நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட காதலரை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த காதலியை போலிஸார் கைது செய்தனர்.

நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட காதலர்.. காதலருக்கு பாடம் புகட்ட நினைத்த காதலி.. இறுதியில் நடந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னையில் சேர்ந்த விகாஸ் ராஜன் என்பவர் தற்போது பெங்களுருவில் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சமூகவலைத்தளம் மூலம் பிரதீபா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். ஆரம்பத்தில் நட்பாக இருந்த இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கியுள்ளனர்.

பின்னர் லிவிங் டு கெதரில் ஒன்றாக இருந்து வந்தனர். தங்கள் திருமணம் பற்றி இரு வீட்டாரிடமும் தெரிவித்த நிலையில், அதற்கு இரு வீட்டாரும் ஒப்புதல் கொடுத்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு விகாஸ் ராஜன் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கோமா நிலைக்கு சென்ற அவர் 3 நாட்களுக்கு பின்னர் உயிரிழந்துள்ளார்.

நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட காதலர்.. காதலருக்கு பாடம் புகட்ட நினைத்த காதலி.. இறுதியில் நடந்த சோகம் !

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில், காதலி பிரதீபா மேல் சந்தேகம் எழுந்துள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளத்தில் பிரதீபாவின் நிர்வாண புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை வெளியிட்டது அவரின் காதலர் விகாஸ் ராஜன்தான் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் காதலன் மேல் பிரதீபா கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட காதலர்.. காதலருக்கு பாடம் புகட்ட நினைத்த காதலி.. இறுதியில் நடந்த சோகம் !

இதையடுத்து, தன்னுடைய நண்பர்கள் கவுதம், சுஷில் மற்றும் சுனில் ஆகிய மூன்று பேரையும் அழைத்து தனது திட்டம் தொடர்பாக கூறியுள்ளார், அதன்படி இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து விகாஸ்ராஜனுடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இது மோதலாக மாறியதில், இரும்பு கம்பியால் விகாஸ்ராஜனை அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் கடுமையாக தாக்கப்பட்ட விகாஸ்ராஜனை பிரதீபா மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பின்னர் பிரதீபா மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலிஸார் அவர்களை கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories