இந்தியா

கல்லூரி வகுப்பறையில் குடிபோதையில் நடனமாடும் ஆசிரியர்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

பஞ்சாபில் கல்லூரி வகுப்பறையில் பேராசிரியர் ஒருவர் மது குடித்துவிட்டு நடனமாடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி வகுப்பறையில் குடிபோதையில் நடனமாடும் ஆசிரியர்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் குருநானக் தேவ் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பேராசிரியராக ரவீந்தர் குமார் என்பவர் உள்ளார். இந்நிலையில் இவர் வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் பாட்டில் ஒன்றிலிருந்து மது குடித்துப் பாட்டுப்பாடி நடனமாடியுள்ளார். இதைச் சற்றும் எதிர்பாராத மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கல்லூரி வகுப்பறையில் குடிபோதையில் நடனமாடும் ஆசிரியர்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

மேலும் இதை அங்கிருந்த மாணவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து பேராசிரியர் ரவீந்தர் குமாரை கல்லூரி நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் அந்த வீடியோவில் 'நான் சொந்த பணத்தில் மது குடிக்கிறேன். என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது' என கூறியுள்ளார்.

தற்போது பேராசிரியர் ரவீந்தர் குமார், 'கேளிக்கைக்காக இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது' என விளக்கம் கொடுத்துள்ளார். பஞ்சாபில் கல்லூரி வகுப்பறையில் பேராசிரியர் ஒருவர் மது குடித்துவிட்டு நடனமாடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories