இந்தியா

2 கிலோ மீட்டர் நிர்வாணமாக நடந்து வந்த 15 வயது சிறுமி.. உ.பி-யில் நடந்த கொடூர பாலியல் வன்கொடுமை சம்பவம்!

உத்தர பிரதேச மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக 2 கிலோ மீட்டர் நடந்து சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 கிலோ மீட்டர் நிர்வாணமாக நடந்து வந்த 15 வயது சிறுமி.. உ.பி-யில் நடந்த கொடூர பாலியல் வன்கொடுமை சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தின் சட்ட ஒழுங்கு நடவடிக்கைதான் நாட்டிற்கும் உலகத்திற்குமே எடுத்துக்காட்டாக உள்ளது என அண்மையில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசிய நிலையில் 15 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக நடந்து செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் போஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

2 கிலோ மீட்டர் நிர்வாணமாக நடந்து வந்த 15 வயது சிறுமி.. உ.பி-யில் நடந்த கொடூர பாலியல் வன்கொடுமை சம்பவம்!

இதையடுத்து அந்த சிறுமி நிர்வாணமாக மொராதாபாத்தில் இருந்து தாகுர்த்வாரா வரை 2 கிலோ மீட்டர் ரத்தம் வழிய அழுதபடி நடந்தே வந்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் இது குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில் இந்த கொடூர சம்பவம் செப்டம்பர் 1ம் தேதி நடந்தது என தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் கொடுத்த புகார் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் நாளுக்குநாள் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதல்கள் அதிகரித்தே வருகிறது. அதிலும் குறிப்பாக பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகமாக உள்ளது என மகளிர் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories