இந்தியா

ம.பி - 3 நாள் அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை.. புகார் அளிக்க சென்ற சிறுமியை கொடூரமாக தாக்கிய போலிஸ் !

பாலியல் புகார் அளிக்கச்சென்ற சிறுமியை போலிஸார் தாக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ம.பி - 3 நாள் அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை.. புகார் அளிக்க சென்ற சிறுமியை கொடூரமாக தாக்கிய போலிஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மத்திய பிரதேச மாநிலத்தில் 14 வயது பட்டியலின சிறுமி ஒருவர் 3 நாட்களாக காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் அந்த சிறுமி தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

திரும்பிய சிறுமி, பாபு கான் என்பவர் வலுக்கட்டாயமாகத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் அவரது வீட்டில் அடைத்து வைத்து தொடர்ந்து 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார்.

ம.பி - 3 நாள் அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை.. புகார் அளிக்க சென்ற சிறுமியை கொடூரமாக தாக்கிய போலிஸ் !

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் தனது மகளுடன் இது தொடர்பாக காவல்நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு காவலர்கள் சிறுமியையும் அவரது தாயையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ள சிறுமியின் தாய், மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து காவல்நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றபோது அங்கிருந்த போலிஸார் புகாரை மாற்றி அளிக்கும் படி கட்டாயப்படுத்தியதாக கூறியுள்ளார்.

ம.பி - 3 நாள் அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை.. புகார் அளிக்க சென்ற சிறுமியை கொடூரமாக தாக்கிய போலிஸ் !

மேலும், என்னுடைய மகளை அடித்துத் துன்புறுத்தினார்கள் என்று கூறியுள்ள அவர், போலிஸார் என்னை வெளியே அழைத்துச்சென்ற பின்னர் மகளை அடைத்துவைத்து எட்டி உதைத்து, பெல்ட்டால் தாக்கியிருக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக உயரதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், மூன்று போலிஸார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாபு கானையும் போலிஸார் கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories