இந்தியா

பா.ஜ.க.,வை சேர்ந்த நடிகை மாரடைப்பால் உயிரிழப்பு : கோவா சுற்றுலாவில் நிகழ்ந்த சோகம் !

டிக் டாக் நட்சத்திரமும் பா.ஜ.கவை சேர்ந்தவருமான சோனாலி போகத் மாரடைப்பால் கோவாவில் உயிரிழந்துள்ளார்.

பா.ஜ.க.,வை சேர்ந்த நடிகை மாரடைப்பால் உயிரிழப்பு : கோவா சுற்றுலாவில் நிகழ்ந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக அறிமுகமான சோனாலி போகத் பின்னர் டிக் டாக் செயலி மூலம் பிரபலமானார். பின்னர் பாஜகவில் இணைந்த இவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

தற்போது 41 வயதாகும் இவர் தனது ஊழியர்களுடன் கோவாவிற்குச் சுற்றுலா சென்றிருந்தார். இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு திடீரென நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவர் வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள செயின்ட் அந்தோணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பா.ஜ.க.,வை சேர்ந்த நடிகை மாரடைப்பால் உயிரிழப்பு : கோவா சுற்றுலாவில் நிகழ்ந்த சோகம் !

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். முதற்கட்ட சோதனையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் முழு விவரம் தெரியவரும் என கூறப்படுகிறது.

ஹரியானா முதல்வர் எம்.எல் கட்டார் ட்விட்டர் பதிவில் சோனாலி போகத் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories