அரசியல்

“கல்வி உதவித்தொகை வழங்க இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?” : த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!

“கல்விக்காக 2026-லும், ஒரு மாணவர் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்படுமானால், ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிலையை எட்ட நாம் மேற்கொண்ட போராட்டங்களின் நோக்கத்தையே தவெக சிதைத்து விட்டது என்றுதான் பொருள்.”

“கல்வி உதவித்தொகை வழங்க இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?” : த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

அம்பேத்கர் அயலக கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், த.வெ.க அரசு தனக்கு வழங்கவேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதால் கல்வியே கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவித்து கண்ணீர் மல்க காணொளி வெளியிட்டுள்ளார்.

உடனடியாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!” என திட்டவட்டமாக அறிவித்தார்.

இதனைச் சுட்டிக்காட்டி, தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு பின்வருமாறு,

“கல்வி உதவித்தொகை வழங்க இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?” : த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!

“மாணவர் பாரதிதாசனுக்கு உறுதியளிக்கப்பட்ட கல்வி உதவித்தொகையை வழங்குவதற்கு இவ்வளவு கெடுபிடிகளை தவெக அரசு விதிப்பதற்கான தேவை என்ன?

கல்விக்காக இந்த 2026-லும், ஒரு மாணவர் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்படுமானால், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிலையை எட்ட நாம் மேற்கொண்ட போராட்டங்களின் நோக்கத்தையே இந்த அரசு சிதைத்து விட்டது என்றுதான் பொருள்.

அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தாலும், ஒரு மாணவரின் கல்விக் கனவு அரசின் பிடிவாதத்திற்குப் பலியாவதை இனியும் அனுமதிக்க முடியாது. என்றும், தி.மு.கழகமும் தமிழ்நாட்டு மக்களும் பாரதிதாசனின் கல்விக்கு உறுதுணையாக நிற்கும் என்றும் அண்ணன் தளபதி அவர்கள் உறுதியளித்துள்ளார்.”

banner

Related Stories

Related Stories