இந்தியா

நம்பிச்சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள்.. நடுத்தெருவில் வீசிச்சென்ற கொடூரம் !

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து நிர்வாணமாக நெடுஞ்சாலையில் வீசிச்சென்ற இளைஞர்களை போலிஸார் கைது செய்தனர்.

நம்பிச்சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள்.. நடுத்தெருவில் வீசிச்சென்ற கொடூரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா என்ற மாவட்டத்தை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் கடந்த ஜூலை 30ஆம் தேதி இரவு தனது சகோதரருடன் சண்டையிட்டுள்ளார். பின்னர் அவரிடம் கோவம் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

பின்னர் தான் வீட்டை விட்டு வெளியே வந்தது தவறு என்பதை உணர்ந்து மீண்டும் வீடு திரும்ப நினைத்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஸ்ரீராம் என்பவர் அந்த பேனை பத்திரமாக வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். அதை நம்பிய அந்த பெண்ணும் அவரோடு சென்றுள்ளார்.

ஆனால், அந்த இளைஞர் அந்த பெண்ணின் வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல் வேறு ஒரு இடத்துக்கு அழைத்துச்சென்றுள்ளார். ஒரு பழைய வீட்டுக்கு அழைத்துச்சென்ற அவர் அங்கு வந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

நம்பிச்சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள்.. நடுத்தெருவில் வீசிச்சென்ற கொடூரம் !

பின்னர் அதே வீட்டில் அந்த பெண்ணை அடைத்துவைத்து பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை நெடுஞ்சாலையில் விட்டுச்சென்றுள்ளார். அங்கு எந்த வித உதவியும் இன்றி அந்த பெண் தவித்த நிலையில், அங்கிருந்து வேறு இடத்துக்கு செல்ல முயன்றுள்ளார்.

அப்போது அந்த பகுதியில் இருந்த இரு இளைஞர்கள் அந்த பெண்ணுக்கு உதவுவது போல நடத்து தனியே அழைத்துச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் அந்த பெண்ணுக்கு கடும் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவர் மயக்கமடைந்துள்ளார்.

நம்பிச்சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள்.. நடுத்தெருவில் வீசிச்சென்ற கொடூரம் !

பின்னர் அந்த இரு இளைஞர்களும் பெண்ணை நிர்வாணமாக சாலையில் தூக்கிப்போட்டு சென்றுள்ளனர். இதைக் கண்ட அந்த பகுதியில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலிஸிலும் புகார் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலிஸார் சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories