இந்தியா

Instagram காதலிக்கு SURPRISE கொடுக்க நினைத்த காதலன் - இரவு முழுவதும் பெண்கள் கழிவறையில் தங்கிய அதிர்ச்சி!

காதலிக்காக கடையிலிருக்கும் பெண்கள் கழிப்பறையில் ஒளிந்துகொண்டு விலையுர்ந்த செல்போனை திருடிய திருடன் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Instagram காதலிக்கு SURPRISE கொடுக்க நினைத்த காதலன் - இரவு முழுவதும் பெண்கள் கழிவறையில் தங்கிய அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு பெரிய எலக்ட்ரானிக் ஷோருமிற்கு அப்துல் முனாஃப் (வயது 27) என்ற இளைஞர் சென்றுள்ளார். அப்போது சரியாக அந்த கடை மூடும் நேரத்தில் உள்ளே நுழைந்த அப்துல், பெண்கள் கழிப்பறைக்குள் நேக்காக புகுந்து ஒளிந்து கொண்டுள்ளார்.

பின்னர் கடையில் உள்ள அனைத்து விளக்குகளை அனைத்த ஊழியர்கள் கடையை மூடிவிட்டு அவரவர் வீட்டிற்கு சென்றனர். கடை மூடப்பட்ட சில மணிநேரத்தில் கழிப்பறையில் இருந்து வெளியே வந்த இளைஞர் அந்த கடையில் உள்ள விலையுயர்ந்த 7 மொபைல் போன்களை எடுத்து ஒளித்து வைத்துக்கொண்டு, மீண்டும் அதே பெண்கள் கழிப்பறைக்கு சென்று மறைந்துள்ளார்.

Instagram காதலிக்கு SURPRISE கொடுக்க நினைத்த காதலன் - இரவு முழுவதும் பெண்கள் கழிவறையில் தங்கிய அதிர்ச்சி!

மறுநாள் காலை கடை திறக்கப்பட்டவுடன், யாரும் பார்க்காத நேரத்தில் வாடிக்கையாளருடன் வாடிக்கையாளராக வெளியே வந்துள்ளார். அவர் வரும்போது அவரிடம் இருந்து ஒரு மொபைல் போன் கீழே விழுந்துள்ளது. இதனை கண்ட ஊழியர் ஒருவர் அந்த மொபைல் போனை எடுத்த போது, அது தனது கடையுடையது என்பதை உணர்ந்தார். பின்னர் சோதனை செய்ததில் கடையில் இருந்த போன்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்த கடைக்காரர், காணாமல் போன மொபைல் போனின் IMEI நம்பரை வைத்து போனை ட்ராக் செய்தனர். அப்போது இந்த திருட்டில் ஈடுபட்ட அப்துல் முனாஃப் என்பது தெரியவந்ததையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்தனர்.

Instagram காதலிக்கு SURPRISE கொடுக்க நினைத்த காதலன் - இரவு முழுவதும் பெண்கள் கழிவறையில் தங்கிய அதிர்ச்சி!

விசாரணையில் அவர் பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், BTM லேஅவுட் பகுதியில் உள்ள ரெஸ்டாரன்ட்டில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்த மங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவரை கவர வேண்டும் என்பதற்காக, அவருக்கு விலை உயர்ந்த மொபைல் போனை பரிசாக கொடுக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார்.

ஆனால் அவரிடம் அதற்கு தேவையான பணம் இல்லாததால், இன்டர்நெட் மூலம் மொபைல் போனை எப்படி திருட வேண்டும் என்று பார்த்துள்ளார். அதன்படி கடந்த ஜூலை 27 ஆம் தேதி பெங்களூரு ஷோரூமில் தனது வித்தைகளை காட்டியுள்ளார். இதையடுத்து திருடிய மொபைல்களில் ஒன்று ஷோரூமில் விழ, மீதி ஆறில் 1 தனது காதலிக்கு கொடுத்துள்ளார். மீதி 5 மொபைல் போனில், தானும் ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளது தெரியவந்தது.

Instagram காதலிக்கு SURPRISE கொடுக்க நினைத்த காதலன் - இரவு முழுவதும் பெண்கள் கழிவறையில் தங்கிய அதிர்ச்சி!

இதையடுத்து அவரிடம் இருந்து சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். காதலிக்கு கொடுக்க விலையுயர்ந்த மொபைல் போனை இளைஞர் திருடியுள்ள சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories