இந்தியா

“குழந்தைகளுக்கு உணவளிக்கவே திண்டாடும் நிலை.. 3 வேளையும் சட்னி அரைத்தே சாப்பிட முடியுமா?” : கனிமொழி MP!

“சாமானிய மக்களின் உணவுப்பொருட்கள் மீது ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளுக்கு உணவளிக்கவே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.” எனக் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

“குழந்தைகளுக்கு உணவளிக்கவே திண்டாடும் நிலை.. 3 வேளையும் சட்னி அரைத்தே சாப்பிட முடியுமா?” : கனிமொழி MP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை காதில் வாங்காத ஒன்றிய அரசுக்கு எதிராக தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனங்களை இருஅவைகளிலுமே பதிவு செய்து வருகின்றனர்.

அந்தவகையில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என மக்களவையில் தி.மு.க. எம்.பி.கனிமொழி பேசியுள்ளார். அப்போது பேசிய கனிமொழி எம்.பி, “விலைவாசி உயர்வு காரணமாக ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கை போராட்டமாக மாறியுள்ளது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தற்போது சுமார் 15 ஆயிரம் ரூபாய் பெட்ரோல், டீசலுக்கு மட்டும் செலவழிக்க வேண்டியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் நிறுத்தப்பட்டுள்ளது.

“குழந்தைகளுக்கு உணவளிக்கவே திண்டாடும் நிலை.. 3 வேளையும் சட்னி அரைத்தே சாப்பிட முடியுமா?” : கனிமொழி MP!

இந்தியாவில் உள்ள சில தொழில் அதிபர்கள் வாழ்வதற்கு அரசு உதவி செய்து வருகிறது. ஆனால் அடித்தட்டு மக்களுக்கு உதவிகள் செய்ய தயங்கும் அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறது.ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளுக்கு உணவளிக்கவே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு குறித்து சிறுமி ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பென்சில் விலை கூட அதிகரித்திருப்பதாக சிறுமி கடிதத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் பலர் வேலையிழந்தனர். மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை கொடுத்தாலே போதும். நாங்கள் யாரிடமும் கடன் வாங்கத்தேவையில்லை.

“குழந்தைகளுக்கு உணவளிக்கவே திண்டாடும் நிலை.. 3 வேளையும் சட்னி அரைத்தே சாப்பிட முடியுமா?” : கனிமொழி MP!

அதேபோல் ஒன்றிய அமைச்சர் பேசுகையில், தக்காளி, வெங்காயத்தின் விலை குறைந்துள்ளதாக கூறுகிறார். மூன்று வேளையும் சட்டினியை மட்டும் அறைத்து சாப்பிட முடியுமா? பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 50,000 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இன்று வரை கருப்பு பணம் ஒழிக்கப்படவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும் கறுப்பு பணம் புழங்கி வருவது எப்படி? ”எனக் கேள்வி எழுப்பினார்.

முன்னதாக கனிமொழி எம்.பி. பேசுகையில், ஆளும் கட்சி எம்.பி.க்கள் பேசவிடாமல் குறுக்கிட்டனர். அப்போது ஒன்று தமிழில் பேசுங்கள். இல்லையென்றால் ஆங்கிலத்தில் பேசுங்கள். மேலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத ஒன்றிய அரசு, நாடாளுமன்றத்திற்கு பேசுவதற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற விரும்பவில்லை என சீறினார். அவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் எழுப்பும் நியாமான கேள்விகளுக்கு பதில் சொல்லுவதை தவிர்த்துவிட்டு, கூச்சல் குழப்பங்களை மோடி அரசின் எம்.பிக்கள் ஏற்படுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories