தமிழ்நாடு

புதிதாக 2 ரன்வேக்கள்.. ஒரு மணிநேரத்தில் 50 விமானங்களை இயக்க பிளான்: புதுப்பொலிவு பெறும் சென்னை ஏர்போர்ட்!

சென்னை விமானநிலையத்தில் ஒரு மணி நேரத்தில் 50 விமானங்களை இயக்கும் வகையில், 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் இயக்குவதற்கான ஏற்பாடுகள் சென்னை விமானநிலையத்தில் செய்யப்படுகின்றன.

புதிதாக 2 ரன்வேக்கள்.. ஒரு மணிநேரத்தில் 50 விமானங்களை இயக்க பிளான்: புதுப்பொலிவு பெறும் சென்னை ஏர்போர்ட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை விமானநிலையத்தில் தற்போது ஒரு மணி நேரத்தில் 30 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன, அதை 50 விமானங்களாக அதிகரிக்க, சென்னை விமானநிலையத்தில், உள்ள 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் இயக்குவதற்கான ஏற்பாடுகள் சென்னை விமானநிலையத்தில் செய்யப்படுகின்றன. மேலும் தரையிறங்கும், புறப்படும் விமானங்கள் வேகமாக இயக்கப்படுவதற்காக, டாக்சி வே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க, புறப்பட 2 ரன்வேக்கள் உள்ளன. முதல் ரன்வே 3.66 கிமீ. இரண்டாவது ரன்வே 2.89 கிமீ. இதில் முதல் ரன்வேயில் பெரிய ரக விமானங்கள் வந்து தரையிறங்கி, புறப்படுகின்றன. இரண்டாவது ரன்வேயில் ATR எனப்படும் 76 பயணிகள் பயணிக்கக்கூடிய சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன.

புதிதாக 2 ரன்வேக்கள்.. ஒரு மணிநேரத்தில் 50 விமானங்களை இயக்க பிளான்: புதுப்பொலிவு பெறும் சென்னை ஏர்போர்ட்!

இந்நிலையில் தற்போது 2 ரன்வேக்களையும் ஒரே நேரத்தில் இயக்க விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: "விமான நிலையத்தின் முதல் ரன்வே பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது ரன்வேயில் கொளப்பாக்கம் பகுதியில், உயா்ந்த அடுக்குமாடி கட்டிடங்கள், செல்போன் டவா்கள் போன்ற தடைகள் அதிகம் இருப்பதால், அதை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. தற்போது அவ்வப்போது முதல் ரன்வேயில் எதாவது பிரச்னை ஏற்படும்போதும், செவ்வாய், சனி பிற்பகலில் வாராந்திர பராமரிப்பு நடக்கும் போது மட்டும், இரண்டாவது ரன்வே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் முதல் ரன்வே அளவுக்கு, இரண்டாவது ரன்வே நீளத்தையும் அதிகரிக்க, இந்திய விமானநிலைய ஆணையம் முடிவு செய்தது. அதற்காக, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய மாநில அரசிடம் தேவையான நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கும்படி கேட்டது. ஆனால் அப்போதைய அரசு நிலம் கையகப்படுத்தி கொடுக்கவில்லை. அதோடு சென்னை அருகே ரூ.40 ஆயிரம் கோடியில் மிகப்பெரிய கிரீண் பீல்டு ஏா்போா்ட் விரைவில் அமைக்கப்படவிருப்பதால், இரண்டாவது ரன்வேயை மேலும் நீடிக்கும் திட்டத்தை இந்திய விமானநிலைய ஆணையம் கைவிட்டுவிட்டது.

புதிதாக 2 ரன்வேக்கள்.. ஒரு மணிநேரத்தில் 50 விமானங்களை இயக்க பிளான்: புதுப்பொலிவு பெறும் சென்னை ஏர்போர்ட்!

இந்நிலையில்,சென்னை விமானநிலையத்தில் உள்நாடு மற்றும் சா்வதேச விமானங்களின் எண்ணிக்கைகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே அதற்கு தகுந்தாற்போல் சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து இயக்கத்தை துரிதப்படுத்த இந்திய விமானநிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதையடுத்து சென்னை விமானநிலையத்தில் உள்ள 2 ரன்வேக்களையும் ஒரே சமயத்தில் பயன்படுத்த, சென்னை விமான நிலைய நிர்வாகம் தற்போது முடிவு செய்துள்ளது. இதன்படி, முதல் பிரதான ரன்வேயை புறப்பாட்டிற்காகவும், இரண்டாவது ரன்வேயை, விமானங்கள் தரையிறங்குதல் மற்றும் சிறிய ரக விமானங்கள் புறப்பாடு இரண்டிற்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புதிதாக 2 ரன்வேக்கள்.. ஒரு மணிநேரத்தில் 50 விமானங்களை இயக்க பிளான்: புதுப்பொலிவு பெறும் சென்னை ஏர்போர்ட்!

இதற்காக, சென்னை விமானநிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்களும் அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு ரன்வேக்களிலும், விமானங்களை இயக்குவது குறித்த பயிற்சி முடிந்ததும், அவற்றை முதலில் சோதனை அடிப்படையில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின்பு நிரந்தமாக அவ்வாறு இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமானநிலையத்தில் தற்போது, பிரதான முதல் ரன்வேயில், ஒரு மணி நேரத்தில், 30க்கும் அதிகமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. 2 ரன்வேக்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் போது, 50 க்கும் அதிகமான விமானங்கள், ஒரு மணி நேரத்தில் இயக்க முடியும். அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. சென்னை விமானநிலையத்தில் விமான சேவைகள் அதிகரித்து கொண்டிருக்கும் இந்த நிலையில், இருக்கும் 2 ரன்வேக்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

புதிதாக 2 ரன்வேக்கள்.. ஒரு மணிநேரத்தில் 50 விமானங்களை இயக்க பிளான்: புதுப்பொலிவு பெறும் சென்னை ஏர்போர்ட்!

இதற்கிடையே தரையிறங்கும் விமானங்கள், விரைந்து வந்து, விமானங்கள் நிற்கும் நடைமேடைக்கு வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. சென்னை விமான நிலையத்தில், தரையிறங்கும் விமானங்கள், ஒரு ஓடு பாதையிலிருந்து, மற்றொரு ஓடு பாதைக்கு விரைவாக செல்ல, ‘டாக்ஸி வே’ எனும் இணைப்பு பாதை பயன்படுத்தப்படுகிறது.

இந்த டாக்ஸி வே ‘பி’ என்ற ‘பிராவோ’, முதல் ஓடுபாதைக்கு, நேராக செல்லாமல், வளைந்து செல்லும் வகையில் இருந்தது. இதனால் தரையிறங்கும் மற்றும் புறப்படும் விமானங்கள், டாக்ஸி வேயில் விரைவாக செல்ல முடியாத நிலை இருந்தது. இந்த டாக்ஸி வே ‘பி’யை நேர்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இது, ஜூலையில் பயன்பாட்டுக்கு வருகிறது. இதனால் விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது மேலும் வேகமாக இயக்கப்படும்.

banner

Related Stories

Related Stories