இந்தியா

சப்பாத்தியால் வந்த சண்டை.. ஆத்திரத்தில் நண்பனை கொலை செய்த ரிக்‌ஷா ஓட்டுநர் - டெல்லியில் கொடூரம்

ரொட்டியை பகிர்ந்துகொள்ளாத நண்பனை கொடூரமாக குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சப்பாத்தியால் வந்த சண்டை.. ஆத்திரத்தில் நண்பனை கொலை செய்த ரிக்‌ஷா ஓட்டுநர் - டெல்லியில் கொடூரம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியில் வசித்து வருபவர் பிரோஸ் மற்றும் முன்னா. இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்து வருகின்றனர். இதில் பிரோஸ் ரிக்‌ஷா ஓட்டி வருகிறார். மேலும் முன்னா குப்பை அள்ளும் தொழில் செய்து வருகிறார்.

சப்பாத்தியால் வந்த சண்டை.. ஆத்திரத்தில் நண்பனை கொலை செய்த ரிக்‌ஷா ஓட்டுநர் - டெல்லியில் கொடூரம்

இந்த நிலையில், சம்பவம் நடந்த நாளன்று, பிரோஸ் மற்றும் முன்னா இருவரும் சேர்ந்து மதுபோதையில் அருகில் இருந்த உணவகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது ரொட்டி வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தபோது, பிரோஸ் ரொட்டி தீர்ந்துவிட்டது. எனவே, முன்னாவின் ரொட்டியை பகிர்ந்து கேட்டுள்ளார் பிரோஸ். அப்போது அதற்கு மறுப்பு தெரிவித்த முன்னா ரொட்டியை உனக்குலாம் தர முடியாது என்று திட்டியுள்ளார்.

சப்பாத்தியால் வந்த சண்டை.. ஆத்திரத்தில் நண்பனை கொலை செய்த ரிக்‌ஷா ஓட்டுநர் - டெல்லியில் கொடூரம்

இதில் மீண்டும் மீண்டும் பிரோஸ் கேட்டபோதும், அதற்கு முன்னா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரோஸ், தன்னிடம் வைத்திருந்த கத்தியால் முன்னாவை 4-5 முறை மாறி மாறி குத்தியுள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் கிடந்த முன்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்ட பிரோஸ் பயத்தில் அங்கிருந்து தப்பிவிட்டார்.

சப்பாத்தியால் வந்த சண்டை.. ஆத்திரத்தில் நண்பனை கொலை செய்த ரிக்‌ஷா ஓட்டுநர் - டெல்லியில் கொடூரம்

பின்னர் உணவகத்தின் ஊழியர், காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது சாட்சியாளர் கூறிய அங்கு அடையாளங்களின்படி பிரோஸை தேடி வந்த காவல்துறையினர் வெறும் 6 மணி நேரத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒரு ரொட்டியை பகிர்ந்துகொள்ளாத நண்பனை கொடூரமாக குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories