இந்தியா

சாலையில் இருந்த உடலை கயிறு கட்டி இழுத்து சென்ற அவலம்.. பீகார் போலிஸாரின் மனிதாபிமானமற்ற செயல்!

பீகார் மாநிலத்தில், சாலையோரம் இருந்த இறந்தவர் சடலத்தை கயிறு கட்டி இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாலையில் இருந்த உடலை கயிறு கட்டி இழுத்து சென்ற அவலம்.. பீகார் போலிஸாரின் மனிதாபிமானமற்ற செயல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டத்திற்குட்பட்ட நிபானியா என்ற கிராமத்தில் சாலையோரம் அடையாளம் தெரியாத சடலம் ஒன்றை போலிஸார் கண்டெடுத்தனர். இதையடுத்து போலிஸார்கள் இறந்தவர் உடலை உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

சாலையில் இருந்த உடலை கயிறு கட்டி இழுத்து சென்ற அவலம்.. பீகார் போலிஸாரின் மனிதாபிமானமற்ற செயல்!

பின்னர் அங்கு வந்த துப்பரவு பணியாளர்கள் உடலை எடுத்துச் செல்வதற்கான வாகனம் மற்றும் ஸ்டெச்சர் இல்லாததால் அவர்கள் இறந்த உடலில் கையிறு கட்டி அப்படியே தரையில் இழுத்துச் சென்றுள்ளனர்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த அதிர்ச்சி வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் இருந்த உடலை கயிறு கட்டி இழுத்து சென்ற அவலம்.. பீகார் போலிஸாரின் மனிதாபிமானமற்ற செயல்!

இந்நிலையில் காவல்துறையினர் இந்த அலட்சியப் போக்குக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட காவல் ஆய்வாளர் அனில்குமார் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories