இந்தியா

வெளிநாட்டில் இருந்து வந்த கணவன் குக்கரால் அடித்து கொலை: காணாமல் போனதாக நாடகமாடிய மனைவி !

வெளிநாட்டிலிருந்து வந்த கணவனை, மனைவி அவரது இரகசிய காதலனுடன் குக்கரை கொண்டு அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்த கணவன் குக்கரால் அடித்து கொலை:  காணாமல் போனதாக நாடகமாடிய மனைவி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே மதுரவாடா பகுதியை சேர்ந்தவர் முதுகு முரளி. இவருக்கும் மற்றொரு பகுதியை சேர்ந்த மிருதுளா என்ற பெண்ணக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது 7 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முரளிக்கு வெளிநாட்டில் பேராசிரியர் வேலையை கிடைத்தது. எனவே அவர் தனது மனைவி மகனை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார்.

அந்த சமயத்தில் மிருதுளாவுக்கு அந்த பகுதியில் இருக்கும் சங்கர் என்ற 18 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் இரகசிய உறவாக மாறியுள்ளது. யாருமில்லாத சமயத்தில் தனிமையில் சந்தித்து இருவரும் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். இப்படி போய்க்கொண்டிருந்த சமயத்தில் கட்ந்த சில நாட்களுக்கு முன்பு முரளி வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வந்த கணவன் குக்கரால் அடித்து கொலை:  காணாமல் போனதாக நாடகமாடிய மனைவி !

ஆனால் நீண்ட மாதங்களுக்கு பிறகு கணவன் வருவதை அறிந்த மனைவி அதிர்ச்சியில் இருந்தார். மேலும் வீட்டிற்கு வந்த முரளியிடம் அவர் சரிவர பேசவில்லை. முரளியே நெருங்கி போய் பேசினாலும் கூட, மிருதுளா முரளியிடம் நெருக்கம் காட்டவில்லை. இதனால் முரளிக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய முரளி, தனது தாயை பார்க்க சென்றுள்ளார். அந்த சமயத்தில் மிருதுளா அவரது காதலனை அழைத்து தனது கணவர் இங்கு இருக்கும் வரை சந்திக்க இயலாது என்று கூறியுள்ளார். இதனால் எரிச்சலடைந்த காதலன் சங்கர், முரளியை கொலை செய்துவிடலாம் என்ற யோசனையை மிருதுளாவிடம் கூறியுள்ளார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வந்த கணவன் குக்கரால் அடித்து கொலை:  காணாமல் போனதாக நாடகமாடிய மனைவி !

அதன்படி சம்பவத்தன்று இரவு முரளி தூங்கி கொண்டிருந்த சமயத்தில் அவரது தலையில் குக்கரை கொண்டு அடித்து கொலை செய்துள்ளார் மிருதுளா. பின்னர் காதலனை அழைத்து இருவரும் முரளியின் சடலத்தை யாரும் பார்க்காத இடத்தில் தூக்கி போட்டுள்ளனர். இதையடுத்து இரண்டு நாட்கள் கழித்து முரளியை தூக்கி போட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது, முரளியின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதையடுத்து அவர்கள் அந்த உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து வந்த கணவன் குக்கரால் அடித்து கொலை:  காணாமல் போனதாக நாடகமாடிய மனைவி !

இதனிடையே முரளியின் தாய், தனது மகனை வீட்டிற்கு வந்து தேடியுள்ளார். அங்கு அவர் காணமல் போனதாக மனைவி கூற, தாய் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மிருதுளாவை துருவி துறவி விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து காவல் அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வெளிநாட்டிலிருந்து வந்த கணவனை, இரகசிய காதலனுடன் சேர்ந்து மனைவியே கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories