இந்தியா

ஒரே மழையில் நாசமான நெடுஞ்சாலை.. மோடி திறந்துவைத்த ஒரே வாரத்தில் சோகம் ! வெளிவந்த பாஜக அரசின் ஊழல்?

14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கட்டப்பட்ட சாலை திறந்து வைத்து ஒரு வார காலம் கூட ஆகாத நிலையில், ஒரு நாள் பெய்த மழையில் சேதமடைந்துள்ளது.

ஒரே மழையில் நாசமான நெடுஞ்சாலை.. மோடி திறந்துவைத்த ஒரே வாரத்தில் சோகம் ! வெளிவந்த பாஜக அரசின் ஊழல்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பந்தல்கண்ட் பகுதியில் அதிவிரைவு சாலை அமைப்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதற்காக 14 ஆயிரத்து 850 கோடி ஒதுக்கப்பட்டது. சுமார் 296 கிலோ மீட்டர் தொலைவிலான இந்த பந்தல்கண்ட் அதிவிரைவு சாலை, சித்ரகூட், பந்தா, ஹமீர்பூர் மற்றும் ஜலான் உள்பட 7 மாவட்டங்கள் வழியாக செல்கிறது.

மேலும் இந்த சாலையின் வழியாக ஆக்ரா - லக்னோ அதிவிரைவுச் சாலை, யமுனா அதிவிரைவுச் சாலை வழியாக விரைவாக டெல்லிக்கு செல்ல முடியும். சுமார் 28 மாதங்களில் நிறைவடைந்த இந்த அதிவிரைவு சாலையை கடந்த சனிக்கிழமை (16-07-2022) பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்த நிலையில், சுமார் 14 கோடி ரூபாய் செலவு செய்து கட்டிய இந்த சாலை, அங்கு பெய்த மழையில் சேதமடைந்துள்ளது.

இது தொடர்பான வீடியோவை எதிர்கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அதில் "பா.ஜ.க.வின் பாதியில் முடிக்கப்பட்ட வளர்ச்சியின் திட்டத்திற்கு இது ஒரு சாம்பிள். பண்டேல்கண்ட் விரைவுச்சாலை பெரிய ஆட்களால் (மோடி) திறந்து வைக்கப்பட்டது. ஒரே வாரத்தில் அதில் பெரும் ஊழல் குழிகள் வெளிவந்தன. குறைந்த பட்சம், அதில் ஓடுபாதை அமைக்கப்படாதது நல்லது" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமின்றி பாஜக எம்.பி., வருண் காந்தியும், தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான வீடியோவை பகிர்ந்து, "15,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த விரைவுச் சாலை, 5 நாட்கள் மழைக்குக் கூட தாக்குப்பிடிக்கவில்லை என்றால், அதன் தரம் குறித்து கடுமையான கேள்விகள் எழுகின்றன.

திட்டத்தின் தலைவர் (head of engineering), சம்பந்தப்பட்ட பொறியாளர் மற்றும் பொறுப்பான நிறுவனங்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரே மழையில் நாசமான நெடுஞ்சாலை.. மோடி திறந்துவைத்த ஒரே வாரத்தில் சோகம் ! வெளிவந்த பாஜக அரசின் ஊழல்?

இது வைரலானதையடுத்து பலரும் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இயந்திரங்கள் மூலம் சாலையை சரி செய்யும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

பந்தல்கண்ட் அதிவிரைவு சாலை திறப்பு விழா நிகழ்ச்சியின்போது இந்த சாலை தங்கு தடையற்ற போக்குவரத்து இணைப்பையும், பந்தல்கண்ட் பகுதியில் பொருளாதார முன்னேற்றத்தையும் அளிக்கும் என்றும், இது மோடி மற்றும் யோகி அரசு என்றும், நாங்கள் நகரங்களை மட்டுமின்றி கிராமங்களையும் மேம்படுத்துவோம் பிரதமர் மோடி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories