இந்தியா

நியூட்டன் மேல ஆப்பிள் விழுந்தது பொய்..பிதாகரஸ் தியரிலாம் வேதத்துல இருக்கு -தேசிய கல்விக்குழு அறிக்கை!

பித்தாகரஸ் தேற்றம், புவி ஈர்ப்பு எல்லாம் வேத கால கணிதத்தில் உள்ளன என கர்நாடக மாநில பா.ஜ.க அரசு அமைத்த தேசிய கல்விக்கொள்கை குழு அறிக்கை அளித்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூட்டன் மேல ஆப்பிள் விழுந்தது பொய்..பிதாகரஸ் தியரிலாம் வேதத்துல இருக்கு -தேசிய கல்விக்குழு அறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தேசிய கல்விக்கொள்கை ஒன்றிய அரசு கடந்த 2020ம் ஆண்டு அமல்படுத்தியது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் ஒன்றிய அரசு இதை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.

பல்வேறு பாஜக ஆளும் மாநிலங்களில் ஏற்கனவே இந்த கல்விக்கொள்கை அமலுக்கு வந்துவிட்ட நிலையில் பல மாநிலங்களில் கல்வி கொள்கையை திணிக்க ஒன்றிய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.

ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையை பா.ஜ.க ஆளும் கர்நாடகத்தில் அமல்படுத்த அம்மாநில அரசு குழு ஒன்று அமைத்துள்ளது. தற்போது அந்த குழு அரசிடம் அளித்த நிலையில் அது வெளியிடப்பட்டுள்ளது.

நியூட்டன் மேல ஆப்பிள் விழுந்தது பொய்..பிதாகரஸ் தியரிலாம் வேதத்துல இருக்கு -தேசிய கல்விக்குழு அறிக்கை!

அந்த அறிக்கையில் கல்வியை முன்னேற்ற கூடிய அறிவிப்புகள் பெரிதாக இல்லாத நிலையில் கல்வியை பின்னோக்கி கொண்டு செல்லக்கூடிய அறிவிப்புகள்இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக புவி ஈர்ப்பு விசை குறித்தும், பித்தாகரஸ் தேற்றம் குறித்தும் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக அரசு அமைத்துள்ள குழுவின் அறிக்கையில், பித்தாகரஸ் தேற்றம் மற்றும் நியூட்டன் மீது ஆப்பிள் விழுந்தது எல்லாம் பொய் என்று கூறப்பட்டுள்ளது

நியூட்டன் மேல ஆப்பிள் விழுந்தது பொய்..பிதாகரஸ் தியரிலாம் வேதத்துல இருக்கு -தேசிய கல்விக்குழு அறிக்கை!

மேலும், பித்தாகரஸ் தேற்றம், புவி ஈர்ப்பு எல்லாம் வேத கால கணிதத்தில் உள்ளன என்றும் கூகிளில் இதற்கான தரவு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. யார் பதிவிட்ட கருத்துக்களும் கூகிளில் இடம்பெறும் நிலையில், அதை ஒரு மாநில அரசின் கல்விக்கொள்கை குழு ஆதாரமாக குறிப்பிட்டுள்ளது கல்வியாளர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக பலரும் இணையத்தில் கர்நாடக மாநில பா.ஜ.க அரசை விமர்சித்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையை முற்றிலும் புறக்கணித்து தமிழகத்துக்கு என்று தனியே கல்வி கொள்கை வகுக்க குழு அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories