இந்தியா

காதலியை சந்திக்க வெளிநாடு சென்றவர் கைது.. மனைவிக்கு தெரியாமலிருக்க செய்த செயலால் நேர்ந்த பரிதாபம்!

மனைவிக்கு தெரியாமல் வெளிநாட்டு காதலியை சந்திக்க சென்றவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதலியை சந்திக்க வெளிநாடு சென்றவர் கைது.. மனைவிக்கு தெரியாமலிருக்க செய்த செயலால் நேர்ந்த பரிதாபம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மும்பையைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர் வெளிநாடு சென்று கடந்த வியாழக்கிழமை இரவு நாடு திரும்பியுள்ளார். அப்போது அவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்த மும்பை விமான நிலைய குடியேற்ற அதிகாரிகள் அதில் சில முக்கிய பக்கங்கள் இல்லாமல் போயுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

உடனே இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய அதிகாரிகள், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கூறிய காரணத்தை கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் இந்த வெளிநாட்டு பயணத்தையே அவர் தனது மனைவியிடம் மறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

காதலியை சந்திக்க வெளிநாடு சென்றவர் கைது.. மனைவிக்கு தெரியாமலிருக்க செய்த செயலால் நேர்ந்த பரிதாபம்!

அலுவலக வேலை காரணமாக வெளி மாநிலத்துக்கு செல்வதாக மனைவியிடம் கூறியுள்ள அவர் உண்மையில் தனது காதலியை காண்பதற்காக வெளிநாடு சென்றுள்ளார். மேலும் தனது மனைவியின் அழைப்புகளையும் ஏற்காமல் இருந்துள்ளார்.

பின்னர் நாடு திரும்பிய அவர், தனது வெளிநாட்டு பயணம் மனைவிக்கு தெரியக்கூடாது என்பதற்காக பாஸ்போர்ட்டில் உள்ள விசா முத்திரை குத்தப்பட்ட பக்கங்களை கிழித்துள்ளார். இதை குடியேற்ற அதிகாரிகள் கண்டிடுபிடித்துள்ளனர்.

காதலியை சந்திக்க வெளிநாடு சென்றவர் கைது.. மனைவிக்கு தெரியாமலிருக்க செய்த செயலால் நேர்ந்த பரிதாபம்!

பாஸ்போர்ட்டை சேதப்படுத்துவது மோசடி குற்றச்சாட்டின் கீழ் வருவதால் விமான நிலைய அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். பின்னர் நடந்த இந்த கைது சம்பவம் குறித்து அவரது மனைவிக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories