இந்தியா

கடுமையான நோய்த்தொற்று - மாணவர்களை தாக்கிய ’நைரோபி ஃப்ளைஸ்’ பூச்சி.. சிக்கிமில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

நூற்றுக்கணக்கான பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தோல் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடுமையான  நோய்த்தொற்று - மாணவர்களை தாக்கிய ’நைரோபி ஃப்ளைஸ்’ பூச்சி.. சிக்கிமில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சிக்கிமில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு தோல் நோய்த்தொற்றுக்கு ஆளாகினர்.

இந்த சம்பவம் அங்கு பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த நோய்த்தொற்றுக்கு காரணம் ஒரு வகை பூச்சி தாக்குதல் என்பது தெரியவந்துள்ளது.

கடுமையான  நோய்த்தொற்று - மாணவர்களை தாக்கிய ’நைரோபி ஃப்ளைஸ்’ பூச்சி.. சிக்கிமில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

’நைரோபி ஃப்ளைஸ்’ எனப்படும் ஒருவகை பூச்சி தொற்றால் இந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பூச்சியால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவரின் கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதாகவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும் நைரோபி ஈக்கள் மனிதர்களை கடிக்காது, கொட்டாது என்றாலும், தோலில் அமர்ந்தால் தீக்காயங்களைப் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

கடுமையான  நோய்த்தொற்று - மாணவர்களை தாக்கிய ’நைரோபி ஃப்ளைஸ்’ பூச்சி.. சிக்கிமில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

மேலும் இதனால் ஏற்படும் கொப்பளங்கள் வடுக்கள் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், நரம்பு வலி, மூட்டு வலி அல்லது வாந்தியெடுத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது சில நேரம் கண் பார்வையும் பாதிக்கப்படலாம் என்றும் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories