இந்தியா

“பார்ட்டிக்கு சென்ற இடத்தில் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்..” : தொழிலதிபர் கணவர் மீது போலிஸ் வழக்குப்பதிவு !

டெல்லியில் மனைவிகளை மாற்றிக்கொள்ளும் விருந்து நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“பார்ட்டிக்கு சென்ற இடத்தில் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்..” :  தொழிலதிபர் கணவர் மீது போலிஸ் வழக்குப்பதிவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெல்லியை சேர்ந்த ஒரு பெண் ஒருவர் போலிஸில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதை கேட்ட போலிஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் அளித்த புகாரில் அவர் கணவர் ஒரு தொழில் அதிபராக இருந்துள்ளார். மேலும் அடிக்கடி மனைவியை விருந்துக்கு வருமாறு அழைத்துள்ளார்.

மேலும் அப்படி வலுக்கட்டாயமாக மனைவியை விருந்து ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போதுதான் அவர் மனைவிக்கு அது மனைவிகளை மாற்றிக்கொள்ளும் விருந்து என்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னர் இது குறித்து தனது கணவரிடம் சண்டையிட்டுள்ளார்.

“பார்ட்டிக்கு சென்ற இடத்தில் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்..” :  தொழிலதிபர் கணவர் மீது போலிஸ் வழக்குப்பதிவு !

இதன் பின்னரும் இது போன்ற விருந்துக்கு வருமாறு அவரை அழைத்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், சம்பவத்தன்று தனது தம்பியுடன் இருக்குமாறு மனைவியை வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு அவர் மனைவி உடன்பட மறுத்த நிலையில், தொழில் அதிபர் மனைவியை சித்ரவதை செய்துள்ளார். மேலும் வேறு ஆண்களுடன் இருக்கும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று அவர் கணவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

“பார்ட்டிக்கு சென்ற இடத்தில் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்..” :  தொழிலதிபர் கணவர் மீது போலிஸ் வழக்குப்பதிவு !

இதனால் கடும் அதிருப்தி அடைந்த மனைவி இது தொடர்பாக போலிஸில் புகார் அளித்துள்ளார். இதன் பின்னரே டெல்லியில் இதுபோன்ற விருந்து நடப்பது போலிஸுக்கு தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக உத்தரபிரதேச நீதிமன்ற உத்தரவுப்படி போலிஸார் தொழில் அதிபர் மற்றும் அவரது தம்பி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு கேரளத்தில் இதே போன்று மனைவிகளை மாற்றிக்கொள்ளும் விருந்து நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories