ஜம்மு காஷ்மீர் மாநிலம் சைத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ப்ரணேகுமார். 10 வயது பள்ளி சிறுவனான இவர் வழக்கம்போல் டியூஷன் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் சிறுவன் வீட்டிற்கு திரும்ப வில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் சிறுவனைப் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை. இதையடுத்து தங்களது மகன் காணவில்லை என பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து சிறுவன் டியூஷன் சென்ற இடத்திற்குச் சென்று போலிஸார் விசாரணை செய்தனர். பிறகு சாலையோரம் இருந்த சாக்கு மூட்டையைத் திறந்தபோது அதில் சிறுவன் உடல் இருந்தை கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
பிறகு உடலை மீட்ட போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சிறுவனின் வாயை டேப்பால் ஒட்டி, கைகள் கால்கள் கையிறால் கட்டப்பட்டிருந்தது. இதனால் சிறுவனை யாரோ கொலை செய்துள்ளனர் என்பது உறுதியானது.
இதையடுத்து போலிஸார் இது குறித்து விசாரணை செய்ததில் 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 10 வயது சிறுவன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.