இந்தியா

மனைவி, 2 குழந்தைகள் கொலை.. தந்தை விஷம் குடித்து தற்கொலை: விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!

புதுச்சேரியில், மனைவி மற்றும் 2 குழந்தைகளைக் கொலை செய்து விட்டு ஆட்டோ ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி, 2 குழந்தைகள் கொலை.. தந்தை விஷம் குடித்து தற்கொலை: விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி பூரணாங்குப்பம் பகுதியைப் பூர்விகமாகக் கொண்டவர் தியாகராஜன். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு பச்சைவாழி என்ற மனைவியும், 7 வயதில் பெண் மற்றும் 3 வயதில் ஆண் குழந்தையும் இருந்தது.

இந்நிலையில், தியாகராஜன் இன்று காலை உறவினர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்கள் அனைவரையும் அழைத்துச் செல்லுங்கள் என கவலையுடன் பேசியுள்ளார்.

மனைவி, 2 குழந்தைகள் கொலை.. தந்தை விஷம் குடித்து தற்கொலை: விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!

இதையடுத்து அவரது பேச்சில் சந்தேகம் இருந்ததால் உறவினர்கள் தியாகராஜன் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது தியாகராஜன் மற்றும் அவரது மனைவி பச்சைவாழி, இந்த தம்பதியின் 2 குழந்தைகளும் சடலமாக இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து உடனே போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு அங்கு வந்த போலிஸார் 4 பேரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மனைவி, 2 குழந்தைகள் கொலை.. தந்தை விஷம் குடித்து தற்கொலை: விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில் கடன் சுமை காரணமாக மனைவி மற்றும் குழந்தைகள் இருவரைக் கொலை செய்துவிட்டு, தியாகராஜன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி மற்றும் 2 குழந்தைகளைக் கொலை செய்து விட்டு ஆட்டோ ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories