இந்தியா

டியூசன் படிக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது!

டியூசன் படிக்க வந்த 10-ம் வகுப்பு மாணவியிடம் 7 மாதங்களாக பாலியல் அத்துமீறிய ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

டியூசன் படிக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திர மாநிலத்திலுள்ள ராய்சோட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் அபிராம ரெட்டி. இவருக்கு திருமணம் ஆகாத நிலையில், அந்த பகுதியிலுள்ள மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார். அதில் 10 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய மாணவி ஒருவர் பயின்று வந்துள்ளார்.

டியூசன் படிக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது!

அப்போது சுமாராக படிக்கும் அந்த மாணவியிடம் அபிராம ரெட்டி, 10-ம் வகுப்பில் உன்னை தேர்ச்சி அடைய வைப்பதாக ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் தவறாக பழகி வந்துள்ளார். மேலும் மற்ற மாணவர்கள் வீட்டிற்கு சென்ற பிறகும் சிறப்பு வகுப்பு எடுப்பதாக கூறி இரவு, நேரமாகி வீட்டிற்கு விடுவார். இப்படியாக தொடர்ந்து 7 மாதங்கள் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் இது குறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் 10-ம் வகுப்பு தேர்வில் பெயில் ஆக்கி விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன மாணவி இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார்.

டியூசன் படிக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது!

இந்த நிலையில் அண்மையில் வெளியான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அந்த மாணவி இரண்டு படங்களில் தேர்ச்சி பெறவில்லை. இது குறித்து அவரது பெற்றோர்கள் அவரிடம் கேள்வியெழுப்ப, டியூசன் நடத்தும் ஆசிரியர் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற வைப்பதாக கூறியதால் சரிவர படிக்கவில்லை என்றும் அவர் தொடர்ந்து பாலியில் தொல்லை கொடுத்ததால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் பெற்றோர்கள், இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், டியூசன் ஆசிரியர் அபிராம ரெட்டியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். டியூசன் படிக்க வந்த மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியரின் செயலால் பெற்றோர்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

banner

Related Stories

Related Stories