வைரல்

"மாடு எப்படினே சுவத்துல போய் ரவுண்டா சாணி போட்டுச்சு?" - IAS அதிகாரி பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்..

பெண் ஒருவர் சரியாகக் குறிபார்த்து சுவரில் சாணியை வீசி அசத்தும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

"மாடு எப்படினே சுவத்துல போய் ரவுண்டா சாணி போட்டுச்சு?" - IAS அதிகாரி பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சமூக வலைதளத்தில் பெருகிய பின்னர் பொதுமக்களிடம் மறைந்துள்ள பல்வேறு திறமைகள் தொடர்ந்து வெளிவந்து வருகின்றது. நம்மில் ஒருவர் தினமும் செய்யும் செயல் கூட பல நேரம் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களை கவர்ந்து வருகிறது.

புதிய தலைமுறை மக்கள் டிக்டாக் போன்ற விடியோக்கள் மூலம் தங்கள் திறமையை நிரூபித்து வரும் நிலையில், முந்தைய தலைமுறையை சேர்ந்தவர்கள் தங்கள் அன்றாட செயல்கள் மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அப்படி ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது. சத்தீஸ்கரைச் சேர்ந்த அவினாஷ் ஷரன் எனும் ஐ.ஏ.எஸ் அதிகாரி வீடியோ ஒன்றை பகிந்துள்ளார். அதில், பெண் ஒருவர் சரியாகக் குறிபார்த்து சுவரில் சாணியை வீசி அசத்தியுள்ளார்.

அந்த பெண் குறித்த தகவல் ஏதும் தெரியாத நிலையில் இவரின் இந்த விடியோவை பலரும் பகிர்ந்து தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் அதில் ஒருவர் இந்திய கூடைப்பந்து அணிக்கு மிக சரியான நபர் கிடைத்துள்ளார் எனக் கூறியுள்ளார்.

"மாடு எப்படினே சுவத்துல போய் ரவுண்டா சாணி போட்டுச்சு?" - IAS அதிகாரி பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்..

இதைத் தொடர்ந்து அந்த பெண் யார் என்ற தேடல் இணையத்தில் அதிகரித்துள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்த பலரும் நம்மில் பலரிடம் ஒழிந்திருக்கும் இது போன்ற திறமைகளை இதேபோன்று வெளிக்கொண்டுவர வேண்டும் என கூறி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories