இந்தியா

“சோற்றில் உப்பு அதிகமானதால் ஆத்திரம்.. மருமகளை சுட்ட கொன்ற மாமனார்” : உ.பி-யில் நடந்த பரபரப்பு சம்பவம் !

சாப்பாட்டில் உப்பு கூடியதால் ஆத்திரப்பட்ட 80 வயது மாமனார், தனது மருமகளை சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

“சோற்றில் உப்பு அதிகமானதால் ஆத்திரம்.. மருமகளை சுட்ட கொன்ற மாமனார்” : உ.பி-யில் நடந்த பரபரப்பு சம்பவம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் வசித்து வருபவர் கபூர் (80). இவருக்கு ஒரு மகள், மகன் மருமகளும் உள்ளனர். தனது குடும்பத்தார் மீது சிறு விஷயத்துக்கே அடிக்கடி கோப்படும் இவர் தனது கோபத்தால் உடனிருப்பவர்கள் காயப்படுவார்கள் என்பதை உணரவும் மாட்டார்.

அப்படியாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, அதில் உப்பு கொஞ்சம் அதிகமாக உள்ளதாக தனது மருமகளிடம் சண்டையிட்டுள்ளார். இதில் மருமகளும் அவரை எதிர்த்து பேச, கோபம் தலைக்கேறிய மாமனார் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து தனது மருமகளை சுட்டுத்தள்ளினார். குண்டடி பட்ட மருமகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

“சோற்றில் உப்பு அதிகமானதால் ஆத்திரம்.. மருமகளை சுட்ட கொன்ற மாமனார்” : உ.பி-யில் நடந்த பரபரப்பு சம்பவம் !

பின்னர் வீட்டிலிருந்த மகன் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது வீட்டில் திருடர்கள் புகுந்ததால், நான் அவர்களை சுட முயற்சித்த போது தவறாக மருமகள் மீது குண்டு பாய்ந்ததாக கண்ணீருடன் கூறினார். இருப்பினும் அவரை நம்பாத காவல்துறையினர் அவரை தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவரது பதில் முரணாக இருந்துள்ளது.

“சோற்றில் உப்பு அதிகமானதால் ஆத்திரம்.. மருமகளை சுட்ட கொன்ற மாமனார்” : உ.பி-யில் நடந்த பரபரப்பு சம்பவம் !

மேலும் திருடர்கள் எந்த வழியே வந்தனர் என்ற கேள்விக்கு, பின் வாசல் பக்கமாக நுழைந்ததாக பதிலளித்தார். ஆனால் அது உள்பக்கம் பூட்டப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். இதையடுத்து அவர் மீது எழுந்த சந்தேகத்தால் மேற்கொண்டு தீவிரமாக விசாரித்ததில், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

சோற்றில் உப்பு அதிகமானதால் சொந்த மருமகளையே சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories