இந்தியா

போலிஸார் தாக்கியதில் ப.சிதம்பரத்தின் விலா எலும்பு முறிவு.. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பரபரப்பு தகவல்!

போலிஸார் தாக்கியதில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

போலிஸார் தாக்கியதில் ப.சிதம்பரத்தின் விலா எலும்பு முறிவு.. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பரபரப்பு தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் அமலாக்கத்துறையில் ஆஜராக வேண்டும் என அண்மையில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று ராகுல்காந்தி ஆஜரானார். முன்னதாக டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து ஏ.பி.ஜே அப்துல்கலாம் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் வரை ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என பலநூற்றுக் கணக்கானோர் பேரணியாகச் சென்றனர்.

அப்போது, போலிஸார் அனுமதியை மீறி பேரணி நடத்தியதாக ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களை அதிரடியாகக் கைது செய்தனர். அப்போது போலிஸாருக்கும் கட்சி தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், போராட்டத்தின் போது போலிஸார் தாக்கியதில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில்," அமைதியான முறையில் நடைபெற்ற பேரணியின்போது போலிசாரின் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் மீது போலிஸார் லத்தியால் தாக்கியுள்ளனர்.

மோடி அரசின் அராஜகப் போக்கினால் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சரும் உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவரின் மூக்கு கண்ணாடி உடைத்துள்ளது. மேலும் அவரின் விலா எலும்பு முறிந்துள்ளது. ஒரு ஜனநாயக நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சரை இப்படித்தான் நடத்துவதா?

மேலும் மூத்த தலைவர்கள் பிரமோத் திவாரி மீதும் போலிஸார் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். அமைதியான முறையில் காங்கிரஸ் தலைவர்கள் தொண்டர்கள் நடத்திய பேரணி போலிஸாரால் சீர்குலைந்து உள்ளதாகவும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு ஆங்காங்கே காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

மோடி அரசின் அராஜக போக்கு காங்கிரஸ் கட்சியினர் ஒருபோதும் அஞ்ச மாட்டோம். வெள்ளையர்களுடன் போராடிய கட்சி உங்களுடனும் தொடர்ந்து போராடும். தங்களுடைய போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories