இந்தியா

பேத்திக்கு பாலியல் தொல்லை? மருமகளின் புகாரால் உத்தரகாண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை.. விசாரணையில் பகீர்!

அவரது பேத்திக்கு அவரே பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ராஜேந்திர பகுகுணாவின் மருமகள் போலிஸில் புகாரளித்திருக்கிறார். அதனடிப்படையில் ராஜேந்திர பகுகுணா மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பேத்திக்கு பாலியல் தொல்லை? மருமகளின் புகாரால் உத்தரகாண்ட்  முன்னாள் அமைச்சர் தற்கொலை.. விசாரணையில் பகீர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பேத்தியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் இணையமைச்சர் மீது அவரது மருமகள் போலிஸிர் புகாரளித்ததை அடுத்து ராஜேந்திர பகுகுணா (59) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்கிறார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 2004-05ம் ஆண்டு என்.டி.திவாரி அமைச்சரவையில் இணையமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பகுகுணா. சாலைவரி தொழிற்சங்கத் தலைவராகவும் பணியாற்றி வந்தவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்தான் ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில், கடந்த வாரம் அவரது பேத்திக்கு அவரே பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ராஜேந்திர பகுகுணாவின் மருமகள் போலிஸில் புகாரளித்திருக்கிறார். அதனடிப்படையில் ராஜேந்திர பகுகுணா மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து கடந்த புதனன்று (மே 26) காவல்நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு ஃபோன் செய்து தான் தற்கொலை செய்துக்கொள்ள போவதாக ராஜேந்திர பகுகுணா தெரிவித்துவித்திருக்கிறார்.

இதனையடுத்து உடனடியாக அவரது இருப்பிடத்திற்கு போலிஸார் விரைந்து அவரது தற்கொலை முடிவை தடுக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் ராஜேந்திர பகுகுணா தனது வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியின் மீது நின்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு இறந்திருக்கிறார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், ராஜேந்திர பகுகுணாவின் மகன் அஜய் இது தொடர்பாக பேசிய போது “தனக்கும் தனது மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளதால் அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். மனைவியும், மகளும் தந்தையுடனேயே வாழ்ந்து வந்தனர். எனது தந்தையிடம் இருந்து பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கில் அவர் மீது பழி சுமத்தியிருக்கிறார் என மனைவி மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனையடுத்து ராஜேந்திர பகுகுணாவின் மருமகள் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories