இந்தியா

காதலனுக்காகத் தாயிடமே கைவரிசை.. ஒரு கிலோ தங்க நகையை விற்று 3 கார்களை பரிசளித்த காதலி!

கர்நாடகாவில், காதலனுக்காகச் சொந்த வீட்டிலேயே தங்க நகைகளைத் திருடிய பெண்ணை போலிஸார் கைது செய்துள்ளனர்.

காதலனுக்காகத் தாயிடமே கைவரிசை.. ஒரு கிலோ தங்க நகையை விற்று 3 கார்களை பரிசளித்த  காதலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா மாநிலம், பெங்களூரு அடுத்த ஜக்கூர் லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தனம்மா. இவரது மகள் தீப்தி. இவருக்குத் திருமணமாகி கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டிலேயே வசித்து வருகிறார். இந்நிலையில், ரத்தனம்மாவின் வீட்டிலிருந்த ஒரு கிலோ அளவிலான பரம்பரை நகைகள் மாயமாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தீபதியிடம் போலிஸார் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலிஸார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

தீப்தி, மதன் என்பவரிடம் கார் ஓட்ட பயிற்சி பெற்று வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து தீப்தி வீட்டில் ஏராளமான நகைகள் இருப்பதைத் தெரிந்து கொண்ட மதன், அதை எடுத்து வந்தால் நாம் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என கூறியுள்ளார்.

இதனால் தீப்தி வீட்டிலிருந்த நகைகளைக் கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து வந்து மதனிடம் கொடுத்துள்ளார். பின்னர் தீப்தியிடம் வாங்கிய நகைகளை வைத்துக் கொண்டு அண்மையில் மூன்று கார்களை மதன் வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. மேலும் 3 கார்களையும் தீப்தி பரிசாக வழங்கியதாக போலிஸாரிடம் மதன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து போலிஸார் தீப்தி மற்றும் மதன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 3 கார்களையும், மதனிடம் இருந்த நகைகளையும் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். காதலனுக்காகச் சொந்த வீட்டிலேயே தங்க நகைகளைத் திருடிய பெண்ணை போலிஸார் கைது செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories