தமிழ்நாடு

நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்.. சினிமா பாணியில் நடந்த விபத்து - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

எடப்பாடி அருகே தனியார் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் நேற்று மாலை நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 30ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்.. சினிமா பாணியில் நடந்த விபத்து - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து 30ற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சங்ககிரியை நோக்கி கோழிப்பண்ணை அருகே நேற்று மாலை சென்றுக்கொண்டிருந்தது.

அப்போது திருச்செங்கோட்டிலிருந்து எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி இரண்டு பேருந்துகளும் புளிய மரத்தில் மோதி சாய்ந்து நின்றது. அப்போது தனியார் பேருந்தின் ஓட்டுனர் அருணாசலம் பேருந்து எஞ்சின் மேல் தூக்கி வீசப்பட்டு விழும் சிசிடிவி காட்சியும் பயணிகள் அலரும் சத்தமும் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே இரண்டு பேருந்துகளிலும் படுகாயம் அடைந்தவர்கள் எடப்பாடி, சங்ககிரி, மற்றும் சேலம், உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இந்த விபத்துகள் குறித்து கொங்கணாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே தனியார் பேருந்தும் தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories