இந்தியா

தலைகீழாக தொங்கவிட்டு கொடூர தாக்குதல்.. இளைஞருக்கு நேர்ந்த அவலம் - குலைநடுங்க வைக்கும் வீடியோ காட்சி!

திருடிய நபரை தலைகீழா கட்டி தொங்கவிட்டுத் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைகீழாக தொங்கவிட்டு கொடூர தாக்குதல்.. இளைஞருக்கு நேர்ந்த அவலம் - குலைநடுங்க வைக்கும் வீடியோ காட்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நான்குபேர் சேர்ந்து கும்பல் இளைஞர் ஒருவரை மரத்தில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு, கொடூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளதாக போலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தாக்குதலுக்குள்ளான நபர் பிலாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த மகாவீர் ஆவார். இவர், சிபாட் நகரில் உள்ள நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். மேலும் அவ்வபோது திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மனிஷ் என்பவரது வீட்டிற்குள் புகுந்து திருட முயன்றுள்ளார். அப்போது மகாவீர், மனிஷிடம் மாட்டிக் கொண்டுள்ளார். பிறகு போலிஸாரிடம் பிடித்துக் கொடுத்தபோது அவர்கள் மகாவீரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் மாகவீர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவரை பிடித்து மரத்தில் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரி போலிஸார் அங்கு வந்து மாகவீரை மீட்டுள்ளனர். பிறகு 4 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடியதற்காக வாலிவரை மரத்தில் கட்டி தொங்கவிட்டு தாக்கிய சம்பவம் சட்டீஸ்கரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories