இந்தியா

உ.பியில் மீண்டும் ஒரு பாலியல் கொலை.. பணிக்கு சென்ற முதல் நாளே இளம் செவிலியருக்கு நேர்ந்த கொடூரம்!

இதுவரையில் குற்றச்சாட்டுக்கு ஆளான எவரையும் போலிஸார் கைது செய்யவில்லை. இதனிடையே இளம் செவிலியரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருக்கிறது.

உ.பியில் மீண்டும் ஒரு பாலியல் கொலை.. பணிக்கு சென்ற முதல் நாளே இளம் செவிலியருக்கு நேர்ந்த கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தரபிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில் மீண்டும் பாலியல் கொலை. பணியில் சேர்ந்த முதல்நாளே 18 வயது செவிலியர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பெண் பங்கார்மு என்ற ஊரில் புதிதாக திறக்கப்பட்ட உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியர் பணியில் சேர்ந்துள்ளார்.

ஏப்ரல் 29ம் தேதியான நேற்று முதல்நாள் பணிக்கு சென்ற அவர் மாலை வீடு திரும்பியுள்ளர். ஆனால், இரவு 10 மணிக்கு அவசரமாக வர வேண்டும் என்று அந்த பெண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து புறப்பட்ட செவிலியர் மறுநாள் (ஏப்.,30) காலை 11 மணிக்கு மருத்துவமனையில் உள்ள வெளிச்சுவரில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் உடல் காணப்பட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளம்பெண்ணின் பெற்றோர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் மருத்துவமனை உரிமையாளர் அனில்குமார் உள்பட 3 பேர் மீது பாலியல் மற்றும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளதாக உன்னாவ் இன்ஸ்பெக்டர் கஜன்னாத் கூறியுள்ளார்.

ஆனால் இதுவரையில் குற்றச்சாட்டுக்கு ஆளான எவரையும் போலிஸார் கைது செய்யவில்லை. இதனிடையே இளம் செவிலியரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories