இந்தியா

“ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமிகள்.. நொடிப் பொழுதில் மீட்ட ராணுவ வீரர்கள்” : வைரலாகும் வீடியோ!

ரிஷிகேஷ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுமிகளை ராணுவ வீரர்கள் மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமிகள்.. நொடிப் பொழுதில்  மீட்ட ராணுவ வீரர்கள்” : வைரலாகும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள ரிஷிகேஷ் ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் River Rafting சாகச நீர் படகு சவாரி செய்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் ஒரு படல் சிலர் சாகசப் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது திடீரென இரண்டு சிறுமிகள் படகிலிருந்து கீழே விழுந்துள்ளனர். இதனால் அவர்கள் வேகமாக ஓடிய ஆற்று நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை மீட்பதற்காகப் படகிலிருந்து வீசிய கயிற்றை அவர்களால் பிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, ஆற்றின் கரையோரம் நின்றிருந்த ராணுவ வீரர்கள் இதைப்பார்த்த உடனே ஆற்றில் குதித்து, நீச்சல் அடித்துச் சென்று இரண்டு சிறுமிகளைப் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி, தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் சிறுமிகளைக் காப்பாற்றிய ராணுவ வீரர்களுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories