விளையாட்டு

“இதையும் வாங்குங்க” - எலான் மஸ்க்கிற்கு குஜராத் அணி வீரரின் கோரிக்கை.. கலாய்த்துத் தள்ளும் நெட்டிசன்கள்!

ஸ்விகியை வாங்குமாறு எலான் மஸ்க்கிற்கு கோரிக்கை வைத்த சுப்மன் கில்லை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

“இதையும் வாங்குங்க” - எலான் மஸ்க்கிற்கு குஜராத் அணி வீரரின் 
கோரிக்கை.. கலாய்த்துத் தள்ளும் நெட்டிசன்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மன் கில் தற்போது ஐ.பி.எல் போட்டியில் விளையாடி வருகிறார். கடந்த சில வருடங்களாகக் கொல்கத்தா அணிக்காக விளையாடிய சுப்மன் கில் இந்த வருடம் ஐ.பி.எல்-லில் புதிதாக களமிறங்கியுள்ள குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார்.

சமீபத்தில் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டரை ரூ.3.30 லட்சம் கோடிக்கு வாங்கியதாக வெளியான தகவல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதையடுத்து COCA COLA நிறுவனத்தையும் வாங்கப்போவதாக இரண்டு நாட்களுக்கு முன்பு ட்வீட் செய்து கார்ப்பரேட் உலகத்தையே பீதியடைய வைத்துள்ளார் எலான் மஸ்க்.

இதையடுத்து பலரும் எலான் மஸ்கிடம் ’இதை வாங்குங்கள், அதை வாங்குங்கள்’ என அவரது ட்விட்டர் ஹேண்டிலை டேக் செய்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லும் அப்படியான ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் நேற்று ட்விட்டர் பக்கத்தில், "இந்தியா முழுவதும் உணவு டெலிவரி செய்து வரும் ஸ்விகி நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி, உணவை வேகமாக டெலிவரி செய்ய உதவவேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சுப்மன் கில்லின் இந்த ட்வீட் வேகமாக வைரலானது. மேலும் பலர் சுப்மன் கில்லை கிண்டலடித்து பதிவிட்டு வருகின்றனர். ஸ்விகி பெயரிலேயே போலி கணக்கை உருவாக்கிய ரசிகர் ஒருவர், “டி20 போட்டிகளில் நீங்கள் விளையாடுவதைவிட நாங்கள் வேகமாகத்தான் டெலிவரி செய்கிறோம்” என கேலி செய்துள்ளனர்.

மேலும், அதுமட்டுமின்றி சுப்மன் கில்லை எலான் மஸ்க் வாங்க வேண்டுமென்றும், அப்படி வாங்கினால் சுப்மன் கில் வேகமாக விளையாடி சதம் அடிப்பார் என்றும் ரசிகர்கள் கிண்டலடித்து வரும் ட்விட்டர் பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் ஒவ்வொரு போட்டிக்குப் பின்பும் அதிவேகமாகப் பந்து வீசக்கூடிய பவுலர்களுக்கு “ஃபாஸ்ட் டெலிவரி” விருதை ஸ்பான்சர் ஸ்விகி நிறுவனம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories