விளையாட்டு

முதல்முறையாக நேருக்கு நேர் மோதும் PBKS - LSG : இரு அணிகளின் பலம், பலவீனம் என்னென்ன? #IPL2022

பஞ்சாப் கிங்ஸ் அணியில் பெரிதாக மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை டெத் ஓவர்களில் பந்துவீசவேண்டும் என்பதற்காக சந்தீப் ஷர்மாவுக்குப் பதில் வேறொருவர் களமிறக்கப்படலாம்.

முதல்முறையாக நேருக்கு நேர் மோதும் PBKS - LSG : இரு அணிகளின் பலம், பலவீனம் என்னென்ன? #IPL2022
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

போட்டி: பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ்

இடம்: மஹாராஷ்டிரா கிரிக்கெட் அசோஷியேஷன் ஸ்டேடியம், புனே.

நேருக்கு நேர்: இந்த இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதியதில்லை. இதுதான் முதல் மோதல்.

சிறந்த பேட்டர்:

பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான் - 8 போட்டிகளில் 302 ரன்கள்

லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ்: கே.எல்.ராகுல் - 8 போட்டிகளில் 368 ரன்கள்

சிறந்த பௌலர்:

பஞ்சாப் கிங்ஸ்: ராகுல் சஹார் - 8 போட்டிகளில் 10 விக்கெட்டுகள்

லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ்: அவேஷ் கான் - 7 போட்டிகளில் 11 விக்கெட்டுகள்

2022 ஐபிஎல் தொடரில் இதுவரை: இதுவரை 8 போட்டிகளில் விளையாடியிருக்கும் பஞ்சாப் கிங்ஸ், தலா 4 வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்திருக்கிறது. புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது அந்த அணி. புனே மைதானத்தில் விளையாடிய ஒரு போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், பஞ்சாப் கிங்ஸ் நான்காவது இடத்துக்கு முன்னேறும்.

லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் அணியோ 8 போட்டிகளில் 5 வெற்றிகள், 3 தோல்விகள் என 10 புள்ளிகள் பெற்றிருக்கிறது. புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது அந்த அணி. புனேவில் இப்போதுதான் அந்த அணி முதல் முறையாக விளையாடப்போகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி இரண்டாவது அல்லது மூன்றாவது இடம் வரை முன்னேறலாம்.

முதல்முறையாக நேருக்கு நேர் மோதும் PBKS - LSG : இரு அணிகளின் பலம், பலவீனம் என்னென்ன? #IPL2022

கடைசிப் போட்டியில்: மும்பை இந்தியன்ஸை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய கையோடு இந்தப் போட்டியில் களமிறங்குகிறது லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ். முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 168 ரன்கள் எடுக்க, மும்பை இந்தியன்ஸை 132 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி வெற்றி பெற்றது அந்த அணி.

பஞ்சாப் கிங்ஸ் அணியோ தங்கள் கடைசி போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களே எடுத்தது.

மாற்றங்கள்: பஞ்சாப் கிங்ஸ் அணியில் பெரிதாக மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை டெத் ஓவர்களில் பந்துவீசவேண்டும் என்பதற்காக சந்தீப் ஷர்மாவுக்குப் பதில் வேறொருவர் களமிறக்கப்படலாம். ஜானி பேர்ஸ்டோ சொதப்பியது போதுமென்று நினைத்தால், ஒரு கூடுதல் பௌலர் இருப்பது நல்லது என்று நினைத்தால் ஒடியன் ஸ்மித் அணிக்குத் திரும்பலாம். வைபவ் அரோரா மீண்டும் களமிறக்கப்படலாம். லக்னோ அணியில் மாற்றங்கள் இருக்காது.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்:

பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான், மயாங்க் அகர்வால் (C), பனுகா ராஜபக்ஷா, லியாம் லிவிங்ஸ்டன், ஜானி பேர்ஸ்டோ / ஒடியன் ஸ்மித், ஜித்தேஷ் ஷர்மா (WK), ரிஷி தவான், ககிஸோ ரபாடா, ராகுல் சஹார், சந்தீப் ஷர்மா, ஆர்ஷ்தீப் சிங்

லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ்: கே.எல்.ராகுல் (C), குவின்டன் டி காக் (WK), மனிஷ் பாண்டே, மார்கஸ் ஸ்டாய்னிஸ், குருனால் பாண்டியா, தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, ஜேசன் ஹோல்டன், துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னாய், மோஷின் கான்

banner

Related Stories

Related Stories