இந்தியா

நட்சத்திர விடுதியில் போதை விருந்து.. பிரபல நடிகரின் மகள், பிக்பாஸ் வெற்றியாளர் உட்பட 142 பேர் கைது !

போதை விருந்தில் கலந்து கொண்ட பிரபல நடிகர் நாகபாபுவின் மகளை போலிஸார் கைது செய்துள்ளனர்.

நட்சத்திர விடுதியில் போதை விருந்து.. பிரபல நடிகரின் மகள், பிக்பாஸ் வெற்றியாளர் உட்பட 142 பேர் கைது !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலங்கானா மாநிலம் ஹதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நேற்று அதிகாலை போதை விருந்து நடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலிஸார் அப்பகுதியில் திடீரென ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த பார்டியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருந்ததை போலிஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த பார்டியில் கலந்து கொண்ட 142 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், பிரபல நடிகர் நாகபாபுவின் மகள் நிஹாரிகா கொனிடேலா, நடிகர் சிரஞ்சீவியின் மருமகள், தெலுங்கு பிக்பாஸ் 3வது சீசனின் வெற்றியாளர் ராகுல் சிப்ளிகுச்சு மற்றும் தெலுங்கு தேசக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரின் மகன், காவல்துறை அதிகாரியின் மகள் ஆகியோரையும் போலிஸார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து நடிகர் நாகபாபு தனது மகளுக்கும் போதைப்பொருளின் பயன்பாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்மையில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் போதை பார்டியில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories