இந்தியா

பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை தாக்க முயன்ற வாலிபர் கைது.. சொந்த கிராமத்தில் நடந்தது என்ன?

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலிஸார் கைது செய்தனர்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை தாக்க முயன்ற வாலிபர் கைது.. சொந்த கிராமத்தில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் இன்று தனது சொந்த கிராமமான பக்தியார் பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது சுதந்திரப் போராட்ட வீரர் ஷில்பத்ரா யாஜியின் சிலைக்கு நிதிஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், முதல்வர் நிதிஷ்குமார் சுதந்திர போராட்ட வீரர் சிலைக்கு மாலை அணிவிக்கும்போது, வாலிபர் ஒருவர் அவரை பின்னால் இருந்து இழுத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் உடனே அந்த நபர் மீது தாக்குதல் நடத்தி அவரை அங்கிருந்து இழுத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் வெளியோகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நெட்டிசன்கள் பல்வேறு விதமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து முதல்வர் மீது தாக்குதல் நடத்திய நபரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் எதற்காக முதல்வர் நிதிஷ்குமார் மீது தாக்குதல் நடத்தினார் என்ற தகவலை போலிஸார் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது நிதிஷ்குமார் மீது ஒருவர் வெங்காயம் வீசினார். அப்போது அந்த நபரைப் பாதுகாப்பு அதிகாரிகள் இழுத்துச் சென்றனர். உடனே நிதிஷ்குமார் அவரை விட்டு விடுங்கள் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories