இந்தியா

ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை முயற்சி.. தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய போலிஸ்! (video)

ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரின் உயிரை காப்பாற்றிய போலிஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை முயற்சி.. தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய போலிஸ்! (video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் விட்டல்வாடி என்ற ரயில் நிலையம் உள்ளது. இங்கு திடீரென ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரின் உயிரை போலிஸார் ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவம் கடந்த மார்ச் 23ம் தேதி நடைபெற்றுள்ளது.

இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளை ரயில்வே போலிஸார் வெளியிட்டுள்ளனர். அதில், ரயில்வே நடைமேடையில் மஞ்சள் நிற டீசர்ட் அணிந்த இளைஞர் ஒருவர் ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவர் அருகே போலிஸார் ஒருவரும் நின்றுகொண்டிருக்கிறார்.

இதையடுத்து தண்டவாளத்தில் ரயில் வந்து கொண்டிருந்தபோது திடீரென அந்த இளைஞர் தண்டவாளத்தில் குதித்து ரயில் தனது மீது ஏறுவதற்காக அப்படியே நின்று கொண்டிருக்கிறார்.

இதை கவனித்த போலிஸார் சற்று நொடியும் தாமதிக்காமல் தண்டவாளத்தில் குதித்து உடனே அந்த இளைஞரை வெளியே இழுத்துச் சென்றவுடன், ரயில் அவர்களைக் கடந்து செல்லும் காட்சிப் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் பதிவேற்றப்பட்ட சில மணி நேரத்திலேயே 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய போலிஸாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இவர் தான் நிஜ ஹீரோ என நெட்டிசன்கள் பலரும் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories