இந்தியா

கோர விபத்து: திருமணத்திற்கு செல்லும்போது நடந்த விபரீதம்.. 50 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து!

ஆந்திர மாநிலம் சித்தூரில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோர விபத்து: திருமணத்திற்கு செல்லும்போது நடந்த விபரீதம்.. 50 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தில் இருந்து சித்தூர் மாவட்டம் நகரி அருகே உள்ள கிராமத்திற்கு திருமணம் நிச்சயதாரத்த்திற்கு தனியார் பேருந்தில் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் உறவினர்கள் என 52 பேர் பயணம் செய்துள்ளனர்.

அப்போது பேருந்து இரவு 11.30 மணிக்கு பாக்கராப்பேட்டை மலைப்பாதை வழியாக திருப்பதி நோக்கிச் வேகமாக செல்லும் போது, பேருந்து அதன் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அதிவேகத்தில் திரும்பியதால் சாலையோரத்தில் உள்ள 50 அடி பள்ளத்தாக்கில் பேருந்து பாய்ந்து தலைகுப்புற கவிழ்ந்தது.

இரவு நேரம் என்பதால், பயணத்தின் போது தூங்கி கொண்டிருந்த பயணிகள், அலறியடித்தனர். அவ்வழியாக சென்ற பிற வாகன ஓட்டிகள் தகவல் தெரிவித்ததையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 45 பேர் காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என்று திருப்பதி காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories