இந்தியா

“இந்த தோல்வியால் சோர்வடைய வேண்டாம்.. 2024ல் இணைந்து போட்டியிடலாம்” : காங்கிரஸ் கட்சிக்கு மம்தா அழைப்பு!

வரவிருக்கும் 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி விருப்பப்பட்டால் இணைந்து போட்டியிலாம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

“இந்த தோல்வியால் சோர்வடைய வேண்டாம்.. 2024ல் இணைந்து போட்டியிடலாம்” : காங்கிரஸ் கட்சிக்கு மம்தா அழைப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பஞ்சாப்பில் புதிதாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இது காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மக்களின் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில் வரவிருக்கும் 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி விருப்பப்பட்டால் இணைந்து போட்டியிடலாம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், காங்கிரஸ் விரும்பினால் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இணைந்து பணியாற்றலாம். 5 மாநில தேர்தல் முடிவுகளைக் கண்டு சோர்வடைய வேண்டாம். நேர்மறையாக சிந்தியுங்கள்.

இதனைத் தோல்வியாக எடுத்துக்கொள்ளக் கூடாது. 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கு இது அடிப்படை என்று நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மம்தாவின் இந்த அறிக்கை, துவண்டு போயிருந்த காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இதுதொடர்பாக இன்னும் காங்கிரஸ் கட்சி முடிவு எடுக்கவில்லை என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

banner

Related Stories

Related Stories